கொள்ளுதல் முனிவர்
மரபு. அன்ன + அரும்: 'அன்னவரும்' என வரற்
பாலது, 'அன்னரும்' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.
16 |
அண்ணி
நீர்தவழ் தீயென வம்புயக்
கண்ணி தாண்மிசை பெய்துழி காதலன்
விண்ணி னீர்முகில் மின்னென நோக்கலோ
டுண்ணி லாவொடின் போர்மழை தூவினான். |
|
அண்ணி, நீர்
தவழ் தீ என அம்புயக்
கண்ணி தாள்மிசை பெய்தஉழி, காதலன்,
விண்ணின் நீர்முகில் மீன் என நோக்கலோடு,
உள் நிலாவொடு, இன்பு ஓர் மழை தூவினான். |
இடையர் அணுகி,
நீரில் தவழும் நெருப்புப்போன்ற தாமரை
மலர்களாலாகிய மாலையைத் தன் அடியில் இட்டபோது, அன்பு கொண்ட
குழந்தை நாதன், வானத்தில் நீர் கொண்ட மேகம் மின்னுவதுபோல
அவர்களைப் பார்த்த பார்வையால், உள்ளத்தில் ஞானவொளியைத்
தந்ததோடு, இன்பத்தையும் ஒரு மழைபோலத் தூவினான். பெய்துழி:
'பெய்தவுழி'
என்பதன் தொகுத்தல் விகாரம்.
17 |
தூவி யோடிய
வாரிது வற்றொடு
காவி லோடிய முத்தெனக் காதலால்
நாவி லோடிய நற்புகழ் சிந்துவா
ரேவி யோடிய கோல்விழி யேந்தினார். |
|
தூவி ஓடிய வாரி
துவற்றொடு,
காவில் ஓடிய முத்து என, காதலால்
நாவில் ஓடிய நல் புகழ் சிந்துவார்,
ஏவி ஓடிய கோல் விழி ஏந்தினார். |
இன்ப மழை பொழிந்து
ஓடிய வெள்ளம் மிகுதலால், காட்டில் ஓடிக்
கரையில் ஒதுங்கிய முத்துப் போல, வில்லினின்று ஏவப்பெற்றுப் பாய்ந்த
|