பக்கம் எண் :

முதற் காண்டம்647

     இப்பாடலுக்கு, "சக்கராயுதமும் முதலிய ஒன்றின்றி," என்ற பழைய
உரைப்பகுதியும், அதற்கேற்ப, "ஆழியு மில் செய" என்று வித்துவான்
ஜெகராவு முதலியார் திருத்திக் கொண்ட பாடமும் பொருந்துவனவாய்
இல்லை. பழையவுரை வீரமாமுனிவர் செய்ததன்று என்பதற்கு இதுவும்
ஒரு வலுவான சான்றாகும்.
 
              22
ஆய வான்மணி யார்ந்தணி யுச்சியாற்
காய நெற்றிக டந்துயர் மாடமுந்
தூய பொன்னொடு சூழ்சுடர் பூணுமித்
தேய வேந்தர்தஞ் செல்வமொன் றில்லதேன்.
 
"ஆய வான் மணி ஆர்ந்து அணி உச்சியால்
காய நெற்றி கடந்து உயர் மாடமும்,
தூய பொன்னொடு சூழ் சுடர் பூணும், இத்
தேய வேந்தர் தம் செல்வம் ஒன்று இல்லது ஏன்?

     "அமைந்த சிறந்த மணிகள் நிறையக் கொண்டு அணிந்த கோபுர
உச்சியால் ஆகாயத்தின் நெற்றியையும் தாண்டி உயர்ந்து நிற்கும்
மாளிகையும், தூய பொன்னாற் செய்து சூழப் பதித்த மணிகள் ஒளிரும்
அணிகலன்களும், இங்குள்ள நாடுகளை ஆளும் அரசர்க்குரிய பிற
செல்வங்களுமாகிய இவற்றுள் ஒன்றும் இவனுக்கு இல்லாதது ஒன்?

     'உச்சி' கோபுர உச்சி எனக் கொள்க. 'காயம்' ஆகாயம் என்பதன்
முதற் குறை.
 
            23
இல்ல தேயில விவ்வழி வந்ததேன்
செல்ல வான்வழி செய்யவந் தானெனில்
வல்ல வேடம ணிந்தும றைவற
வெல்ல வானுரு வேய்ந்தினன் றல்லதோ.