பக்கம் எண் :

முதற் காண்டம்648

"இல் அதே இல, இவ் வழி வந்தது ஏன்?
செல்ல வான் வழி செய்ய வந்தான் எனில்,
வல்ல வேடம் அணிந்து, மறைவு அற,
வெல்ல வான் உரு வேய்ந்தின், நன்று அல்லதோ?

     "குடியிருக்கும் இல்லமாகிய அதுவுமே இல்லாமல், இந்தக் குகை
இடத்தைத் தேடிவந்து பிறந்தது ஏன்? மக்கள் வானுலகம் அடைவதற்குரிய
வழியைக் காட்ட வந்தானெனில், அதற்குரிய வல்லமையுள்ள கோலம்
அணிந்து, வெல்வதற்குரிய தனது வானுலக உருவத்தை மறைக்காமல்
வந்து தோன்றினால், அது நல்லதாகாதோ?
 
              24
ஓவுண் டாயவு ருக்கொடு வென்னுளத்
தாவுண் டாயின வையமி தேயினித்
தூவுண் தாதுவ தூய்மலர் வாய்திறந்
தேவுண் டோது தி யாயிழை யாயென்றாள்.
 
"ஓவு உண்டு ஆய உருக் கொடு, என் உளத்து
ஆவு உண்டாயின ஐயம் இதே; இனி,
தூவு உண் தாதுவ தூய்மலர் வாய்திறந்து,
ஏவு உண்டு ஓதுதி, ஆய் இழையாய்!" என்றாள்.

     "துன்பத்தை உட்கொண்டு அமைந்த இக் குழந்தை நாதனின்
உருவத்தை நினைவிற்கொண்டு, என் உள்ளத்தில் ஆவல் காரணமாக
எழுந்த ஐயம் இதுவே; அழகிய ஞான அணிகளை உடையவளே, இனி,
தூவுகின்ற உண்ணத்தக்க தேனைக்கொண்ட உன் மலர் வாய் திறந்து,
எனக்கு உரிய கட்டளையையும் மனத்தில் கொண்டு, இதற்கு மறுமொழி
கூறுவாய்" என்று முடித்தாள் சாந்தி.

     தாதுவ - தாதினை உடைய: குறிப்புப் பெயரெச்சம்.
 
             25
என்ற வாசக மெந்தைம னுக்குலஞ்
சென்ற வாயருள் காட்டிய சீருணர்
வொன்ற லாகியு ருகிய தாய்புனல்
மின்ற வாவிழி தூவிவி ளம்பினாள்.