"வேண்டும் ஓர்
வினை, வேண்டும் என்றால் முடித்து
ஆண்டும் ஓர் தனிக் கோல் அரசான் எரி
தூண்டும் ஓர் சினம் தோன்று உழி, அப் பகை
தாண்டும் ஓர் வலி தாங்குவர் யாவரோ? |
"தான்
செய்ய வேண்டிய ஒரு செயலை, வேண்டுமென்று நினைத்தாலே
முடித்து, ஒரு தனிச் செங்கோலால் உலகங்களையெல்லாம் ஆளும்
அரசனாகிய ஆண்டவனிடம் நெருப்பை மூட்டி விட்டது போன்ற ஒரு
சினம் தோன்றும்போது, அந்தப் பகையைத் தாண்டிச் செல்லக் கூடிய ஒரு
வல்லமை கொண்டவர் யாரோ?
ஆண்டும் - ஆளும்
'சொற்றும்' என்பது போலக் கொள்க.
28 |
யாவ
ருங்கடி தஞ்சலொ டெஞ்சுவான்
மீவ ருந்துளி மேதினி மொய்த்ததும்
தீவ ருந்துளி யைம்புரம் தீந்ததும்
தூவ ரும்பல வுந்தொகை சொற்றவோ. |
|
"யாவரும் கடிது
அஞ்சலொடு எஞ்சுவான்,
மீ வரும் துளி மேதினி மொய்த்ததும்,
தீ வரும் துளி ஐம் புரம் தீந்ததும்,
தூ வரும் பலவும் தொகை சொற்றவோ? |
"மக்கள் யாவரும்
மிகுதியான அச்சத்தோடு மடிந்து ஒழியுமாறு,
வானின்று பொழியும் மழை வெள்ளம் உலகத்தை மூடிக்கொண்டதும்,
தீயாக இறங்கி வரும் மழையால் சோதோம் முதலிய ஐந்து நகரங்கள்
எரிந்ததும், இவ்வாண்டவனால் தூய்மை பொருந்தவரும் பிற பல வல்லபச்
செயல்களும் தொகை சொல்லிக் காட்டவேண்டுமோ?
துளி
மேதினி மொய்த்தது: முன் 5-வது திருமணப்படலம், 37-ம்
பாடல் அடிக்குறிப்பு நோக்குக. ஐம்புரம் தீந்தது: ப. ஏ., ஆதியாகமம்,
18 : 16-33, 19 : 1-25; முன் 14-வது இளவல் மாட்சிப் படலம் 129-137
காண்க. |