| 29 |
சொற்ற
விர்ந்தவ ருட்டொழிற் காலிதென்
றுற்ற விர்ந்தவு டுமுடி யாளுரைத்
திற்ற விர்ந்தவி டைச்சியு ணர்ந்தபின்
பற்ற விர்ந்தவு ரைப்பயன் கூறுவாள். |
| |
"சொல் தவிர்ந்த
அருள் தொழில் கால் இது" என்று
உற்று அவிர்ந்த உடு முடியாள் உரைத்து,
இற்று அவிர்ந்த இடைச்சி உணர்ந்த பின்,
பற்று அவிர்ந்த உரைப் பயன் கூறுவாள்; |
"மேலும், இது
சொல்லுக்கு அடங்காத கருணைச் செயலைக் கடவுள்
செய்யும் காலம்" என்று, மிகுதியாக ஒளிர்ந்த விண்மீன்களை முடியாக
அணிந்த மரியாள் உரைக்கவும், ஒளிர்ந்த இடைச்சியாகிய சாந்தி இதனை
உணர்ந்த பின்னும், தன் ஆசை விளங்கிய உரையைப் பயன்கருதிக்
கூறுவாள்:
| 30 |
கூறு
வாள்செயுங் கொள்கையி னென்றுளம்
பீறு வாளெனப் பின்னையோ ரையமுந்
தேறு வாய்மொழி கேட்டிடச் செப்புவே
னீறு வாயில வெந்தையி னன்னையே. |
| |
"கூறுவாள் செயும்
கொள்கையின், என் உளம்
பீறு வாள் எனப் பின்னை ஓர் ஐயமும்
தேறு வாய் மொழி கேட்டிடச் செப்புவேன்,
ஈறு வாய் இல எந்தையின் அன்னையே! |
"முடிவு காலம்
இல்லாத நம் தந்தையாகிய ஆண்டவனின் தாயே,
வாள் கூறுபடுத்தும் தன்மை போல, என் உள்ளத்தைக் கிழிக்கும்
வாள்போல் பின்னும் எழுந்த ஓர் ஐயமும் தெளிய வேண்டி உன்
வாய்மொழியைக் கேட்டு அறியுமாறு இதைக் கூறுவேன்.
| 31 |
அன்னை
தந்தையி லானறை நூற்படி
யென்னை யிங்களித் தோன்வரு மெல்வையின்
மின்னை யொன்றிய வேடமெ டுத்தவன்
றன்னை யாவருந் தாழவி றைஞ்சுவார் |
|