"அன்னை தந்தை
இலான், அறை நூற் படி,
என்னை இங்கு அளித்தோன் வரும் எல்வையின்,
மின்னை ஒன்றிய வேடம் எடுத்து, அவன்
தன்னை யாவரும் தாழ இறைஞ்சுவார். |
"வேத நூலிற்
சொல்லியுள்ளபடி, தாயும் தந்தையும் இல்லாமல்
தானாய் விளங்கும் ஆண்டவன், என் போன்ற மனிதரை மீட்டுக்
காப்பவனாய் இவ்வுலகில் வந்து தோன்றும் காலத்தில், மின்னல் போன்ற
வேடம் எடுத்து வரவே, அவனை யாவரும் தாழ்ந்து வணங்குவர்.
அளித்தோன்
- அளிப்பவன்: உறுதி பற்றி வந்த கால வழுவமைதி.
32 |
அஞ்சு
வாரவன் முன்னுல காள்பவ
ரெஞ்சு வாரவ னையிறைஞ் சாரென
விஞ்சு மாரண மாகவி ளம்பினார்
துஞ்சு மாதவ ரேயெனச் சொல்லினாள். |
|
"அஞ்சுவார் அவன்
முன் உலகு ஆள்பவர்;
எஞ்சுவார் அவனை இறைஞ்சுவார்" என
விஞ்சும் ஆரணம் ஆக விளம்பினார்
துஞ்சு மா தவரே? எனச் சொல்லினாள். |
" இவ்வுலகத்தை
ஆளும் அரசரெல்லாம் அவன்முன் அஞ்சி
நடுங்குவரென்றும், அவனை வணங்காதவர் கெட்டொழிவரென்றும்,
மறைந்துவிட்ட பெருந்தவத்தோர் மேலான வேதவாக்காகச்
சொல்லியுள்ளார்களே?" என்றாள்.
33 |
சொல்லக்
கேட்டனள் தொன்மொழித் தன்மையும்
வெல்லக் கேட்பரும் வெஞ்சினத் தெல்லைநா
ளொல்லக் கேட்டன ருட்குற வாவதைப்
புல்லக் கேட்கிலி யான்புகழ் வேனென்றாள். |
|