பக்கம் எண் :

முதற் காண்டம்653

சொல்லக் கேட்டனள், "தொன் மொழித் தன்மையும்
வெல்ல, கேட்பு அரும் வெஞ் சினத்து, எல்லை நாள்
ஒல்ல, கேட்டனர் உட்கு உற, ஆவதைப்
புல்லக் கேட்கில், யான் புகல்வேன்," என்றாள்.

     சாந்தி சொன்னதைக் கேட்ட மரியாள், "உலக முடிவு நாள் வரவே,
அது பற்றிப் பழமையாகச் சொல்லப்பட்ட செய்திகளை வெல்லும்
வகையிலும் கேட்பதற்கு அரிய கொடிய சினத்தோடும், கேட்டவருமே
அஞ்சி நடுங்குமாறும், நிகழவிருப்பதனைப் பொருந்திக் கேட்க நீங்கள்
விரும்பினால், நான் சொல்வேன்" என்றாள்.

     கேட்கில் + யான் - கேட்கிலியான்: யகரம் வர மெய்யின் முன்
இகரம் தோன்றியது.
 
             34
தாளெ ழுங்கம லஞ்சுடர் தாவிய
கோளெ ழுங்கதிர் கொண்டேனக் கேட்டலும்
வாளெ ழுந்தகண் மாதொடி யாவருஞ்
சூளெ ழுந்துறச் சொல்லெனக் சொல்லுவாள்.
 
தாள் எழும் கமலம் சுடர் தாவிய
கோள் எழும் கதிர் கொண்டு என, கேட்டலும்,
வாள் எழுந்த கண் மாதொடு யாவரும்,
சூள் எழுந்து, "உறச் சொல்" என, சொல்லுவாள்:

     இவ்வாறு சொல்லக் கேட்டதும், வாள் போன்ற கண்களை உடைய
சாந்தியோடு ஏனைய இடையர் யாவரும், தண்டில் எழுந்து நின்ற தாமரை
சுடர் பரந்த பகலவனின் கதிரை உட்கொண்டு மலர்ந்தது போல,
ஆணையிட்ட முறையில் எழுந்து நின்று, "நன்றாகச் சொல்" என்று வேண்ட
மரியாள் பின் வருமாறு தொடர்ந்து கூறுவாள்:

     'சூழ்' என்பது எதுகை நோக்கிச் 'சூள்' எனத் திரிந்தது என்று
கொள்ளுதலும் ஒன்று.