"அழுது, ஆர்ந்த
துயர்க் கரத்தில் பிறந்து, கைக்கும்
அரந்தையின் பால் அருந்தி வளர்ந்து அருள் வளர்த்த
பொழுது, அர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப,
பொறை ஏராய்ப் பூட்டி, செம்புனல் சேறு ஆக
உழுது, ஆர்ந்த ஆர்வ விதை வித்தி, பின்னும்
உரிய வர நீர் இறைத்து விளைந்த இன்பம்
வழுது ஆர்ந்த வையகத்தார் உய்தற்கு ஈவான்,மணிக்
கலத்து ஊடு அமுது ஏந்தும் அருள் மொய் மார்போன். |
"மாணிக்கக்கலத்தின்
உள்ளே அமுதத்தைத் தாங்கி நிற்பது போன்று
அருள் நிறைந்த நெஞ்சங் கொண்ட ஆண்டவன், அழுதவண்ணமாய்,
நிறைந்த துன்பத்தின் கையிலே பிறந்து, கசப்பான துயரமென்னும் பால்
அருந்தி வளர்ந்து எங்கும் அருளை வளர்த்துக் கொண்டிருக்கும் காலத்தில்,
நிறைந்த வஞ்சகம் கொண்டோர் தன்மீது பகை கொண்டு எதிர்த்து முழங்க,
தானோ, பொறுமையை ஏராகப் பூட்டி, தன் உதிரத்தை நீராகச் சொரிந்து
சேறு பட உழுது, நிறைந்த தயவை விதையாக விதைத்து, அதன்மேல் உரிய
வரங்களை நீராகப் பாய்ச்சி, அதன் மூலம் விளைந்த பேரின்பத்தைப் பொய்
நிறைந்த இவ்வுலகத்தார் உய்வதற்கென்று தந்து உதவுவான்.
38 |
பொய்பொதுளு
மைம்பொறியின் மனமுஞ் செல்லப்
போக்கியகால்
பொருள்புகழின் பெவரும் வெஃகி
மைபொதுளும் வினைபொதுள விளைந்த பாவ
மருட்சீய்க்கப்
பொறைமிடிதாழ் வுரிய தல்லாற்
கைபொதுளுங் கனிவிடமென் றொருவு கென்றான்
கனிவென்னத்
தானருந்திப் பொன்றற் போல
மெய்பொழுது மறைதந்தோன் விலகுந்தீமை
விழைந்துற்றா
லுலகிற்கும் பொருந்தும் பாலோ. |
|
"பொய் பொதுளும்
ஐம் பொறி பின் மனமும் செல்லப்
போக்கிய கால், பொருள் புகழ் இன்பு எவரும் வெஃகி,
மை பொதுளும் வினை பொதுள விளைந்த பாவ
மருள் சீய்க்கப் பொறை மிடி தாழ்வு உரியது அல்லால்,
கை பொதுளும் கனி விடம் என்று, 'ஓருவுக' என்றான்
கனிவு என்னத் தான் அருந்திப் பொன்றல் போல,
மெய் பொதுளும் மறை தந்தோன் விலகும் தீமை
விழைந்து உற்றால் உலகிற்கும் பொருந்தும் பாலோ? |
|