பக்கம் எண் :

முதற் காண்டம்657

     "பொய் நிறைந்த ஐம்பொறிகளின் பின் தம் மனமும் போகுமாறு
செலவிட்டபோது, எல்லோரும் பொருள் புகழ் இன்பம் ஆகியவற்றையே
விரும்பி, அதன் மூலம் இருள் செறிந்த செயல்களே நிறைவதனால்
விளைந்த பாவமென்னும்மயக்கத்தைப் போக்க வேண்டுமாயின்,
அவ்வாண்டவனுக்குப் பொறுமை வறுமை தாழ்மை என்ற இயல்புகளே
உரியனவாகப்பொருந்தும். அல்லாமல், தன் கையில் செறிந்துள்ள கனி
நஞ்சுள்ளது என்று தெரிந்து, 'அதனை விலக்குக' என்று பிறருக்கெல்லாம்
கூறிய ஒருவன், அது கனிவுடையது என்று தானே அதனை உண்டு
மடிந்தாற்போல, மெய் செறிந்த வேதத்தைத் தந்த ஆண்டவன்
பிறரெல்லாம் விலகி நடக்கும் தீமையைத் தானே விரும்பிக்
கைக்கொண்டால், அது உலகியலுக்குப் பொருந்தும் தன்மை தோ?
 
               39
இக்காலந் தயைக்கால மென்று தோன்றி
     யெளியனெனத் திரிந்தினிய தெவர்க்குங் கூறி
முக்காலங் கடந்துண்ர்த்திச் சுருதி நன்னூன்
     மொழிந்தருளைக் காட்டியபின் முதிர்ந்த நீதி
யக்காலங் குறுகியகா றீர்வை தீர்க்க
     வாங்கிவன்றான் மூவுலகங் கலங்கிக்கூச
மிக்காலங் காலுருவத் தெய்தா முன்னர்
     விடுந்தூதென் றெய்துமெலாஞ் சொல்லும் பாலோ.
 
இக் காலம் தயைக் காலம் என்று தோன்றி,
     எளியன் எனத் திரிந்து, இனியது எவர்க்கும் கூறி,
முக்காலம் கடந்து உணர்த்து, இச் சுருதி நல் நூல்
     மொழிந்து அருளைக் காட்டிய பின், முதிர்ந்த நீதி
அக் காலம் குறுகிய கால், தீர்வை தீர்க்க,
     ஆங்கு இவன் தான் மூ உலகம் கலங்கிக் கூச,
மிக்கு ஆலம் கால் உருவத்து எய்தா முன்னர்
     விடும் தூது என்று எய்தும் எலாம் சொல்லும் பாலோ?

     "இக்காலம் தயவின் காலம் என்பதனால் மேலே கூறியவாறு தோன்றி,
எளியவன் போல எங்கும் அலைந்து திரிந்து, எல்லோர்க்கும் இனியதே கூறி,
முன்று காலங்களையும் கடந்து நின்று உணர்த்தும் இந்த வத நன்னூல்
எடுத்துச் சொல்லித்