பக்கம் எண் :

முதற் காண்டம்659

                  41

கடுகியன விடிச்சூல்கொள் கருங்கார் மொய்ப்பக்
     கணகணெனக் கடுஞ்செந்தீ மாரி தூவ
வடுகியெனப் பெய்தவழல் திரண்டாங் கோட
     மண்டிருண்ட புகையள்ளுந் தன்மை மூய்ப்ப
மூடுகியன சாபமழைத் திரளின் விம்ம
     முகிற்கீறி யிடியிடித்த விடிக டாக்கக்
கிடுகி டெனப் பாருலக நடுங்கி யாடக்
     கிளர்துயர்கொண் டுயிரனைத்து மாளு மன்றே.
 
"கடுகியன இடிச் சூல் கொள் கருங் கார் மொய்ப்ப,
      கணகணெனக் கடுஞ் செந் தீ மாரி தூவ,
வடுகி எனப் பெய்த அழல் திரண்டு ஆங்கு ஓட,
       மண்டு இருண்ட புகை அள்ளும் தன்மை மூய்ப்ப,
முடுகியன சாப மழைத் திரளின் விம்ம
      முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க,
கிடுகிடெனப் பார் உலகம் நடுங்கி ஆட,கிளர் துயர்
        கொண்டு உயிர் அனைத்தும் மாளும் அன்றே.

     "கடுமையான இடியைக் கருப்பங் கொண்டுள்ள கரு மேகங்கள்
திரளவும், அம்மேகங்கள் கணகணவென்று எரியும் கடுமையான
செந்நெருப்பை மழையாகப் பொழியவும், அவ்வாறு பெய்த நெருப்பு அங்கே
ஆறு போல் ஓடவும், மண்டிய இருண்ட புகை அள்ளிக் கொள்ளும்
அளவாய் மூடி நிற்கவும், வில்லினின்று வேகமாய்ப் பாய்ந்த அம்பு மழைக்
கூட்டம் போல் ஓசை எழுமாறு மேகத்தைக் கிழித்து இடி இடித்து விழுந்த
இடிகள் தாக்கவும், கிடுகிடுவென்று மண்ணுலகம் நடுங்கி ஆடவுமாக,
உயிர்கள் அனைத்தும் மிகுந்த துயரம் கொண்டு அன்றே மடிந்து போகும்.
 

                     42

வெம்பரமா சினத்தெரிந்த மண்ணோ ரெல்லாம்
     வெண்பலியா யினபின்னர் வயத்திற் கெஞ்சா
தும்பரமாள் தனிக்கோலா னேவுந் தன்மைத்
     தும்பர் பலர் விடுங்கணையில் விரைந்து சென்றே
யம்பர நான் கோடியெழுங் சடலுங் காரு
     மதிர்த்தரவ மெஞ்சிவிஞ்சக் காள மூதி
யெம்பரமா விறைவனிடுந் தீர்வை கேட்ப
     வெழுமினென வெழுந்திருப்பர் மக்களெல்லாம்.