|
"முன் ஒன்றுமே
இல்லாதிருக்கையில், தான் ஏவுகின்ற வல்லமை
ஒன்றைக் கொண்டே, இப்போது உள்ள உலகங்கள் மூன்றையும் அழகாய்
உண்டாக்கிய ஆண்டவன், தான் விரும்புகின்ற திருவுளம் ஒன்றையே
கொண்டு, சொல்ல இயலாத தன் ஆற்றலால், சாம்பலாகவும் புழுதியாகவும்
முடிவு நாளில் சிதறுகின்ற உடலின் பகுதிகளையெல்லாம் ஒன்றாய்
சேர்ப்பதனால், பழமையைன இவ்வுலகம் தொடங்கிய நாள் முதல்
இவ்வுலகில் பரந்து கிடக்கின்ற மனித இனத்தார் யாவரும், ஒருவனும்
விலக்கின்றி, தம் உடலை அணிந்து உயிரோடு எழுந்து திரண்டு நிற்பர்.
'நிற்பார்'
என உயர்திணை முடிபு பெறவே, உயிரோடு எழுந்து என்பது
பெறப்படும். 'ஆக்கினோன்' என்பது 'ஆக்கின்றோன்' என விரிந்து நின்றது.
| 44 |
குலமுறையு மினமுறையு
மொன்றும் பாரா
குணத்தொகையால்
வேறுபட வினையைச் செய்த
நலமுறையும் பார்த்திருபால் பகுப்ப வானோர்
நம்பிதன
தில்லைளை மகனைத் தன்றாய்
பலமுறையு மூதுனனைத் தம்பி யோர்தூர்
பற்றியபற்
கிளைதம்முட் பிரிந்து நிற்கும்
வலமுறையுங் கண்டலறித் தளர்ந்து நோக
வானவரீண்
டெவரையுமோ ரிடத்திட் டுய்ப்பார். |
| |
"குல முறையும்
இன முறையும் ஒன்றும் பாரா,
குணத் தொகையால் வேறுபட, வினையைச் செய்த
நல முறையும் பார்த்து இரு பால் பகுப்ப வானோர்,
நம்பி தனது இல்லாளை, மகனைத் தன் தாய்,
பல முறையும் மூதுனனைத் தம்பி, ஓர் தூர்
பற்றிய பல் கிளை தம்முள் பிரிந்து நிற்கும்
வல முறையும் கண்டு, அலறித் தளர்ந்து நோக,
வானவர் ஈண்டு எவரையும் ஓர் இடத்து இட்டு உய்ப்பார். |
"குல முறையும்
உறவு முறையும் என்ற ஒன்றையும் பாராமல், அவரவர்
குணத்தின் கணக்கால் மட்டுமே வேறுபடு மாறு, செயல்களைச் செய்த நல்ல
முறையையும் பார்த்து, வானவர் அவர்களை இரு பிரிவாய்ப் பிரிப்பர்.
அதனால், கணவன் தனது மனைவியையும், தாய் தன் மகனையும்,
பலமுறையாலும் மூத்தவனைத் தம்பியுமாக, ஒரே தூரில் பற்றி நின்ற பல
|