|
கிளைகள் தம்முள்
பிரிந்து நிற்கும் வலிய நிலைமையையும் கண்டு யாவரும்
அலறித் தளர்ந்து நோவர். இவ்வாறு இரு பிரிவாய்த் திரண்ட எல்லோரையும்
வானவர் தனித்தனியே ஓர் இடத்தில் கொண்டு சேர்த்து வைப்பர்.
உலகியலில் பிரிந்த
கணவன் மனைவி போன்றோர் மீண்டும் கூடும்
முயற்சிக்கும் வாய்ப்பிற்கும் இடமுண்டு. நடுத்தீர்வை நாளில் அதற்கு இடமே
இல்லையாதலின், 'வலமுறை' எனப்பட்டது. 'மூத்தோன்' என்ற பிரிவில்,
தந்தை தாய் தமையன் குரு என்ற பல வகையாரும் அடங்குதலின், 'பல
முறையும் மூதுனன்' எனப்பட்டது. 'இரு பால் பகுப்பு' முன்
கூறப்பட்டமையின், பின் 'ஓர் இடத்து' என்பதன் முன், 'தனித் தனியே' என்ற
சொல்லை ஒட்டிக் கொள்க.
| 45 |
இடியுண்ட
முகிலொருபால் மின்னி விம்ம
விகன்முரசும்
பற்பறையு மொருபா லார்ப்பக்
கொடியுண்ட வான்றளங்க ளொருபான் முன்னக்
கோக்கணம்போன்
மற்றமர ரிருபாற் சூழத்
துடியுண்ட வொலிக்கொடுசூழ் வெருவுய்த் தொல்இச்
சுடர்தவழுந்
துய்முகிலிற் பொலிந்து தோன்றி
முடியுண்ட வரசரா செனமே னிற்பான்
முருகுமுகை
முகத்திங்க ணிற்கு மின்னான். |
| |
"இடி உண்ட முகில்
ஒரு பால் மின்னி விம்ம,
இகல் முரசும் பல் பறையும் ஒரு பால் ஆர்ப்ப,
கொடி உண்ட வான் தளங்கள் ஒரு பால் முன்ன,
கோக் கணம் போல மற்று அமரர் இரு பால் சூழ,
துடி உண்ட ஒலிக்கொடு சூழ் வெரு உய்த்து ஒல்கிச்
சுடர் தவழும் துய் முகிலில் பொலிந்து தோன்றி,
முடி உண்ட அரசர் அரசு என மேல் நிற்பான்,
முருகு முகை முகத்து இங்கண் நிற்கும் இன்னான். |
"இடியைக்
கொண்ட மேகம் ஒரு பக்கம் மின்னி முழங்கவும், போர்
முரசும் பல வகைப் பறைகளும் ஒரு பக்கம் ஒலிக்கவும், கொடியைக்
கொண்ட வானவர் படைகள் ஒரு பக்கம் முன்னே செல்லவும், ஏனைய
வானவர் அரசர் கூட்டம் போல் இரு பக்கமும் சூழ்ந்துவரவும், மணமுள்ள
மலர் மொட்டுப் போன்ற முகத்தோடு இங்கு இருக்கும் இக் குழந்தை நாதன்,
|