|
துடிப்பைத் தரும் ஓசையோடு
சுற்றிலும் அச்சம் பிறப்பித்து ஒடுங்கி நின்று
ஒளியுடன் விளங்கும் தூய வெண் மேகத்தின் மேல் பொலிவுடன் வந்து
தோன்றி, முடி சூடிய அரசர்க்கெல்லாம் அரசனாக வானத்தில் நிற்பான்.
| 46 |
குன்றெழுந்த
செஞ்சுடர்போன் முகின்மே றோன்றுங்
குணத்தொகையோன் வலத்திறைஞ்சி யுயர வானோர்ச்
சென்றெழுந்த நல்லோரை முகம னோக்கித்
தீயலகை
யினத்தினுட னிடத்தி லஞ்சி
நின்றெழுந்த துயரழற்று மனத்தீ யோரை
நெடுவேற்கண்
ணாற்சுளித்து நோக்கி நோக்கும்
நன்றெழுந்த வினைப்பயத்தால் விளக்கிட் டன்ன
நவையெல்லா
மெல்லார்க்குந் தோற்று விப்பான். |
| |
"குன்று எழுந்த
செஞ்சுடர் போல் முகில் மேல் தோன்றும்
குணத் தொகையோன் வலத்து இறைஞ்சி, உயர வானோர்ச்
சென்று எழுந்த நல்லோரை முகமன் நோக்கி,
தீ அலகை இனத்தினுடன் இடத்தில் அஞ்சி
நின்று, எழுந்த துயர் அழற்று மனத் தீயோரை
நெடு வேல் கண்ணால் சுளித்து நோக்கி, நோக்கும்
நன்று எழந்த வினைப் பயத்தால், விளக்கு இட்டு அன்ன,
நவை எல்லாம் எல்லார்க்கும் தோற்றுவிப்பான். |
"மலை மீது எழுந்த
கதிரவன் போல் மேகத்தில் வந்து தோன்றும்
நற்குணமெல்லாம் ஒருங்கே கொண்டுள்ள அவ்வாண்டவன், தன் வலப்
பக்கமாக நின்று வணங்கி, வானவரோடு உயரச் சென்று எழுச்சி கொண்ட
நல்லவரை ஆர்வத்தோடு நோக்குவான்; தன் இடப்பக்கத்தில் நரகப்
பேய்க் கூட்டத்துடன் அஞ்சி நின்று, மேலோங்கிய துயரத்தால் வெம்பும்
மனங்கொண்ட தீயோரைத் தன் நெடிய வேல் போன்ற கண்ணால்
சினந்து நோக்குவான்; அவ்வாறு நோக்கும் நன்மை அமைந்த செயலின்
விளைவாக, விளக்கை இட்டு வைத்தாற் போல, அவரவர் செய்த
குற்றமெல்லாம் எல்லோர்க்கும் புலப்படுமாறு செய்வான்.
|