| 47 |
முற்செய்கை
யனைத்துமவண் டோன்றித் தீமை
முயன்றதுமுள்
விரும்பியது முரைத்த சொல்லும்
நற்செய்கை நன்றாய்ச்செய் யாமற் செய்த
நவையுமொளித்
திருடேடி யிரவிற் செய்த
தற்செய்கை யாவுமன்றே நடுங்கிக் கூசத்
தரணியெலா
முற்றறியத் தவம்ப யக்கும்
மற்செய்கை யுறுதியினா லிமிழி லிக்கால்
மறையவவை
துடையாதாற் றோன்று மன்றே. |
| |
"முன் செய்கை
அனைத்தும் அவண் தோன்றி, தீமை
முயன்றதும், உள் விரும்பியதும், உரைத்த சொல்லும்,
நல் செய்கை நன்றாய்ச் செய்யாமல் செய்த
நவையும், ஒளித்து இருள் தேடி இரவில் செய்த
தன் செய்கை யாவும், அன்றே நடுங்கிக் கூச,
தரணி எலாம் முற்று அறிய, தவம் பயக்கும்
மல் செய்கை உறுதியினால் இமிழில் இக்கால்
றைய அவை துடையாதால், தோன்றும் அன்றே. |
"முன் தான் வாழ்ந்த
காலத்தில் அவனவன் செய்த செயல்கள்
அனைத்தும் அங்கு வெளிப்படத் தோன்றும், தீமை செய்ததும், மனத்தால்
விரும்பியதும், சொல்லிய சொல்லும் நல்ல செயலையுமே நன்றாய்ச்
செய்யாமல் அரைகுறையாய்ச் செய்த குற்றமும், பிறருக்கு ஒளித்து இரவில்
இருளைத் துணையாகத் தேடிச் செய்த தன் செய்கையும், இவை யாவும்,
அந்த நாளில் தானே நடுங்கிக் கூசுமாறும், உலகமெல்லாம் முழுதும்
அறியுமாறும், - தவத்தின் பயனாக விளையும் வீரச் செயலின் கொண்ட
உறுதியினால் இனிதாக இவ்வாழ்நாட் காலத்தில் அவை மறைந்தொழியுமாறு
துடைக்கத் தவறினால் - அந்நாளில் வெளிப்படத் தோன்றும்.
| 48 |
மின்னவீ
ழுருமன்ன சுளித்து நோக்கி
வெருவுய்க்கு
முகத்தார்த்து விமலன் சொல்வான்
றுன்னிவீழ் புனலன்ன நிலையாச் செல்வத்
தொகுதிவிழைந்
தறநீத்த பாவி காள்விண்
சென்னிவீழ் துளியாதி சூழ்ந்த யாவுந்
திளைப்பத்தந்
தனனானா யென்னை நீக்கி
வன்னிவீழ்ந் தெரிவஞ்சப் பேய்க டம்மை
வரக்கடவு
ளென்றெண்ணித் தொழுத தென்னோ. |
|