"மின்னி வீழ்
உரும் அன்ன சுளித்து நோக்கி,
வெரு உய்க்கும் முகத்து ஆர்த்து, விமலன், சொல்வான்:
துன்னி வீழ் புனல் அன்ன நிலையாச் செல்வத்
தொகுதி விழைந்து அறம் நீத்த பாவிகாள்! விண்
சென்னி வீழ் துளி ஆதி சூழ்ந்த யாவும்
திளைப்பத் தந்தனன் நான் ஆய், என்னை நீக்கி,
வன்னி வீழ்ந்து எரி வஞ்சப் பேய்கள் தம்மை
வரக் கடவுள் என்று எண்ணித் தொழுதது என்னோ? |
"எக் குற்றமுமற்ற
ஆண்டவன், மின்னி விழும் இடிபோலச் சினந்து
நோக்கி, அச்சம் வருவிக்கும் முகத்தோடு முழங்கிச் சொல்வான்: 'மழையால்
ஒன்றுகூடி விழுந்து மறையும் அருவி போல நிலையில்லாத செல்வத்திரளை
விரும்பி அறநெறியைக் கைவிட்ட பாவிகளே! வானத்தின் நெற்றியிலிருந்து
விழும் மழை முதலாக உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் அனுபவிக்கத்
தந்தவன் நானாய் இருக்கவும், என்னை விலக்கிவிட்டு, நரக நெருப்பில்
விழுந்து எரியும் வஞ்சகப் பேய்களை வரம் தரும் கடவுளென்று எண்ணி
நீங்கள் தொழுதது ஏனோ?
| 49 |
நூல்வழியே
வந்தமறை நீக்கிக் காம
நுழைவழியாங்
கதைபலவுஞ் சுருதி யென்றீர்
கோல்வழியே கோட்டமில வென்னைப் போற்றுங்
குணத்தவரைக்
குலமிலரே யென்றீர் நீங்கா
வேல்வழியே யிரத்தமுக வவரைக் கொன்றீர்
வீட்டிலிவ
ரென்னொடுவாழ்ந் துவப்பத் தீமை
கால்வழியே வணங்கியதீ வஞ்சத் தேவர்
கணத்தொடுநீ
ரூழித்தீ முழுகி வேவீர். |
| |
"நூல் வழியே
வந்த மறை நீக்கி, காமம்
நுழை வழி ஆம் கதை பலவும் சுருதி என்றீர்.
கோல் வழியே கோட்டம் இல் என்னைப் போற்றும்
குணத்தவரைக் குலம் இலரே என்றீர்; நீங்கா,
வேல் வழியே இரத்தம் உக அவரைக் கொன்றீர்;
வீட்டில் அவர் என்னுடன் வாழ்ந்து உவப்ப, தீமை
கால் வழியே வணங்கிய தீ வஞ்சத் தேவர்
கணத்தொடு நீர் ஊழித் தீ முழுகி வேவீர்! |
|