பக்கம் எண் :

முதற் காண்டம்666

     "'நூல் என்ற சிறப்புப் பெயர் தாங்கிய வேத நூல் அடிப்படையில்
வந்த உண்மைச் சமயத்தைப் புறக்கணித்து, காம இச்சை நுழைவதற்கு
வழியாய் அமைந்த கட்டுக் கதைகள் பலவற்றையும் வேதம் என்று
ஏற்றுக்கொண்டீர். செங்கோல் நெறியில் கோணுதல் இல்லாத என்னைப்
போற்றும் குணம் படைத்தோரை நற்குலம் இல்லாதவரென்று பழித்தீர்;
உண்மைச் சமயத்தை விட்டு நீங்க இசையாத அவரையெல்லாம் இரத்தம்
சிந்த வேலைச் செலுத்திக் கொன்றீர்; இப்பொழுது அவர் வான் வீட்டில்
என்னுடன் மகிழ்ந்து வாழ, நீரோ, பாவத்தைப் பொழியும் வழியைக்
கடைப்பிடித்து வணங்கிய தீய வஞ்சகத் தேவர் கூட்டத்தோடு
முடிவில்லாத காலம் நெருப்பில் மூழ்கிக்கிடந்து வேவீர்!
 

                 50

நண்ணாது நின்றுழிநான் றெரிந்த நீரோ
     நன்மறைநூ லுணர்ந்துணரா தவரைப் போன்றீ
ருண்ணாது மீயாதும் பொருளீட் டிட்டீ
     ருளபிறர்கைப் பொருள்கொண்டீ ரிகழ்ந்தீர்
                                 பொய்த்தீ
ரெண்ணாது தாய்தந்தை யிறைஞ்சீர் கேளீ
     ரெதிர்த்துடன்று பகைத்தீர்பொய் யாணை யிட்டீர்
கண்ணாது பிறர்மனை போய்க் காமத் தாழ்ந்தீர்
     கதிவழியெய் தாரொடுதீ நரகிற் றாழ்வீர்.
 
நண்ணாது நின்ற உழி நான் தெரிந்த நீரோ,
     நல் மறை நூல் உணர்ந்து, உணராதவரைப் போன்றீர்;
உண்ணாதும் ஈயாதும் பொருள் ஈட்டிட்டீர்;
    உள பிறர் கைப் பொருள் கொண்டீர்; இகழ்ந்தீர்;
                                 பொய்த்தீர்.
எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர்; கேளீர்
     எதிர்த்து உடன்று பகைத்தீர்; பொய் ஆணை இட்டீர்;
கண்ணாது பிறர் மனை போய்க் காமத்து ஆழ்ந்தீர்;
          கதி வழி எய்தாரொடு தீ நரகில் தாழ்வீர்!'

     'என்னை அணுகி வராது நின்றவிடத்து நானே தெரிந்தெடுத்துக்
கொண்ட நீரோ, நல்ல வேத நூலை உணர்ந்திருந்தும் உணராதவரைப்போல்
நடந்து கொண்டீர்; நீரே உண்ணாமலும் பிறருக்கு ஈயாமலும் பொருளைத்
தேடிக் குவித்தீர்; பிறர் கையிலுள்ள பொருளைக் கவர்ந்து கொண்டீர்;
பொருள் அற்றவரை இகழ்ந்தீர்; பொருளை முன்னிட்டுப் பொய் சொன்னீர்.
தாய் தந்தையரை மதியாமலும் வணங்காமலும் இருந்தீர்; அவர் சொற்