பக்கம் எண் :

முதற் காண்டம்667

கேளாது இருந்தீர். பிறரோடு மாறுபட்டு எதிர்த்துப் பகைத்தீர்; பொய்யாணை
இட்டீர்; சற்றும் கருதிப் பாராமல், பிறர் மனையாளை விரும்பிப்போய்க்
காமத்தில் ஆழ்ந்தீர். எனவே, மோட்சக் கதி சேரும் வேத நெறியை
அடையப் பெறாதாரோடு நீரும் போய்த் தீ நரகில் மூழ்குவீர்!'
 
                51
என்றானார்த் தசனியனா னென்ற தன்மைத்
     தெவ்வுலகு மதிர்த்தஞ்ச வார்ப்பா ரன்னார்
குன்றாதாங் குளசெல்வ மிழந்தோ நொந்தோங்
     குலைகிற்போங் கரைகாணா மருண்டோங்
                               கெட்டோம்.
பின்றாதார்த் தெரிவேவோ மந்தோ வந்தோ
     பேறில்லார் குலமில்லா ரவரை யென்றோம்
பொன்றாதார் வாழவவர் பொன்றா தந்தோ
     புகைச்செந்தீ வேவோநா மந்தோ வென்பார்.
 
"என்றான் ஆர்த்து அசனி அனான் என்ற தன் மைத்து,
   எவ் உலகும் அதிர்த்து அஞ்ச ஆர்ப்பார் அன்னார்:
'குன்றாது ஆங்கு உள செல்வம் இழந்தோம்; நொந்தோம்!
   குலைகிற்போம்; கரை காணா மருண்டோம்; கெட்டோம்!
பின்றாது ஆர்த்து எரி வேவோம்; அந்தோ, அந்தோ!
   பேறு இல்லார் குலம் இல்லார் அவரை என்றோம்;
பொன்றாதார் வாழ அவர், பொன்றாது, அந்தோ,
   புகைச் செந் தீ வேவோம் நாம், அந்தோ!' என்பார்.

     'என்று மேலே காட்டிய வண்ணம் இடி போன்ற ஆண்டவன் முழங்கிச்
சொல்லிய தன்மையால், அந்தப் பாவிகள் எவ்வுலகும் அதிர்ச்சியுற்று அஞ்சும்
வண்ணம் இவ்வாறு முழங்குவர்: 'என்றும் குறைபடாது அவ்வான் வீட்டில்
நிறைந்துள்ள செல்வமெல்லாம் இழந்தோம்; அதனால் நொந்தோம்!
குலைவுக்கு ஆளானோம்; முத்திக் கரையைக் காணவொட்டாமல்
மயங்கினோம்; கெட்டோம்! இடைவிடாமல் அலறி நெருப்பிலே வேவோம்;
ஐயோ, ஐயோ, நல்லோராகிய அவரையெல்லாம் பேறு இல்லாதவர், குலங்
கெட்டவர் என்றெல்லாம் பேசினோமே; இப்பொழுது அவரெல்லாம்
அழிவற்றவராய் என்றும் பேரின்பத்தில் வாழ, நாமோ, ஐயோ,
அழிந்தொழியவும் இடமின்றி, புகை சூழ்ந்த நரகச் செந்தீயில் என்றும்
வேவோம், ஐயோ!' என்று புலம்புவர்.