| 52 |
துடித்திடுவா
ருடல்பதைப்பார் மோதி வீழ்வார்
சுழழ்கிற்பார்
புரள்வார்நொந் தழுவார் சோர்வார்
கடித்திடுவார் தம்முடலை முனிவா ரார்ப்பார்
கலுழ்கிற்பார்
குருதிகடா விடத்தாந் தம்மை
யடித்திடுவா ருடற்கீறி யூனுண் டாற்ற
ரயர்ந்தேங்கித்
தயங்குகிற்பார் துயரின் வெள்ளங்
குடித்திடுவார் தீக்கடலை நீந்தார் நீந்தார்
குன்றாதெஞ்
ஞான்றுமெரி பொன்றா வேவார். |
| |
"துடித்திடுவார்;
உடல் பதைப்பார்; மோதி வீழ்வார்;
சுழல்கிற்பார்; புரள்வார்; நொந்து அழுவார்; சோர்வார்.
கடித்திடுவார் தம் உடலை; முனிவார்; ஆர்ப்பார்;
கலுழ்கிற்பார். குருதிகள் தாவிடத் தாம் தம்மை
அடித்திடுவார்; உடல் கீறி ஊன் உண்டு ஆற்றார்.
அயர்ந்து ஏங்கித் தயங்குகிற்பார்; துயரின் வெள்ளம்
குடித்திடுவார். தீக் கடலை நீந்தார் நீந்தார்.
குன்றாது எஞ்ஞான்றும் எரி பொன்றா வேவார்." |
"பாவிகள் நரகத்தில்
உள்ளம் துடிப்பார்; உடல் பதைப்பார்;
ஒருவரோடொருவர் மோதிக் கீழே விழுவார்; சுழன்று வருவார்; தரையில்
புரள்வார்; நொந்து அழுவார்; சோர்வு கொள்வார்; தம் உடலைத் தாமே
கடிப்பார்; சினங் கொள்வார்; அலறுவார்; கண்ணீர் விடுவார். இரத்தத்
தாரைகள் பாய்ந் தோடத் தாமே தம்மை அடித்துக் கொள்வார்; தம்
உடலைக் கிழித்து ஊனை உண்டும் பசி ஆறப் பெறார். அதனால்
சோர்ந்து ஏங்கி, யாது செய்வதென்று தயங்குவார். தாகத்திற்குத் துயரம்
என்னும் வெள்ளத்தையே சூடிப்பார். அந்நெருப்புக் கடலை நீந்தி
நீந்தியும் கரை காணார். எந்நாளும் வேதனை குறையமலும், எரிந்து
அழியாமாலும், அந்நெருப்பிற் கிடந்து வெந்துகொண்டேயிருப்பார்."
|