| 53 |
வானகத்தே
பேருவகை பயக்கும் பாலால்
வடிவமுகத்
திவனல்லோர் தம்மை நோக்கிக்
கானகத்தே துயருண்டீர் நிந்தை யுண்டீர்
கசடற்றீ
ரறம்பூண்டீ ரினியெஞ் ஞான்றும்
மீனகத்தே மீன்களென வொளிர்ந்தென் னோடோர்
வீட்டிடைவீற்
றிருந்தாள வெந்தை யாசி
மானகத்தே பெற்றோரே வம்மி னென்னா
வரக்கடலின்
மூழ்குவப்பிற் றொழுவார் நல்லோர். |
| |
"வானகத்தே பேர்
உவகை பயக்கும் பாலால்
வடிவ முகத்து இவன், நல்லோர் தம்மை நோக்கி,
கானகத்தே துயர் உண்டீர்; நிந்தை உண்டீர்;
கசடு அற்றீர்; அறம் பூண்டீர்; இனி எஞ்ஞான்றும்
மீன் அகத்தே மீன்கள் என ஒளிர்ந்து என்னோடு ஓர்
வீட்டிடை வீற்றிருந்து ஆள, எந்தை ஆசி
மால் நகத்தே பெற்றோரே, வம்மின்!' என்னா,
வரக் கடலில் மூழ்கு உவப்பின் தொழுவார் நல்லோர்." |
"வானுலகத்தில்
பெருமகிழ்ச்சி ஊட்டும் தன்மையான அழகிய
வடிவமுள்ள முகத்தோடு விளங்கும் இக் குழந்தைநாதன், அவ்விறுதித்
தீர்ப்பு நாளில், நல்லோரை நோக்கி, 'பெரிய மண்ணுலகில் என் தந்தையாகிய
கடவுளின் ஆசி பெற்றோரே, அந்நாளில் காட்டில் சென்று தவம் செய்து
துயரம் அடைந்தீர்; நிந்தைகளை அனுபவித்தீர்; பாவம் அன்று வாழ்ந்தீர்;
அறத்தைக் கைக்கொண்டு ஒழுகினீர்; இனி, விண்மீன்களிடையே விண்மீன்கள்
போல் எக்காலமும் ஒளியுடன் விளங்கி, ஒப்பற்ற வான் வீட்டில் என்னோடு
வீற்றிருந்து அரசாள வாருங்கள்!' என்று கூறவே, நல்லோரெல்லாம்
வரமென்னும் கடலில் மூழ்கிய மகிழ்ச்சியோடு தொழுவர்."
| 54 |
மறநெஞ்சீர்
போய்த்திருவென் முகத்த கன்றே
மண்ணையுட
னூழித்தீ போமி னென்னா
வறநெஞ்சா ரொடுவானோர் புகழ்ந்து சூழ
வாங்கிவன்றான்
வானினுயர் செல்லுங் காலிற்
புறநெஞ்சீர்ந் தனதுயரோ டிவற்றைக் கண்ட
பொதிர்தீயோ
ரயர்ந்தேங்கிப் புலம்பிச் சீறத்
திறநெஞ்சீர்ந் தெனப்புவியுட் பிளந்த வாயிற்
றிரண்டுருண்டார்த்
தலறித்தீ நரகில் வீழ்வார். |
|