" 'மற நெஞ்சீர்,
போய்த் திரு என் முகத்து அகன்றே,
மண்ணையுடன் ஊழித் தீ போமின்!' என்னா,
அற நெஞ்சாரொடு வானோர் புகழ்ந்து சூழ
ஆங்கு இவன் தான் வானின் உயர் செல்லும் காலில்,
புறம் நெஞ்சு ஈர்ந்து அன துயரோடு, இவற்றைக் கண்ட
பொதிர் தீயோர், அயர்ந்து ஏங்கிப் புலம்பிச் சீற,
திற நெஞ்சு ஈர்ந்து எனப் புவி உள் பிளந்த வாயில்
திரண்டு உருண்டு ஆர்த்து அலறித் தீ நரகில் வீழ்வார்." |
"அற
நெஞ்சம் கொண்ட நல்லாரோடு வானவரும் தன்னைப் புகழ்ந்து
சூழ, அங்கிருந்து இவ்வாண்டவன் தானும் உயர்ந்த வான் வீட்டிற்குச்
செல்லும் வேளையில், தீயோரை நோக்கி, 'பாவ நெஞ்சம் உடையவரே,
என் திரு முகத்தை விட்டு அகன்று போய், பேயுடன் முடிவில்லாக் காலத்து
நரக நெருப்புக்குப் போங்கள்!' என்று கூறவும், இவற்றையெல்லாம் கண்ட
நிறைந்த தீயோர், உள்ளே தம் நெஞ்சத்தை அறுத்த தன்மையாய்ப் புறத்தும்
தோன்றும் துயரத்தோடு அயர்ந்தும் ஏங்கியும் புலம்பியும் தாமே தம்மைச்
சினந்து சீறிக் கொண்டிருக்கையில், தம் வலிமை வாய்ந்த நெஞ்சை
அறுத்துவிட்டதுபோல் உள்ளே பிளந்து நின்ற வாய் வழியாகத் திரண்டு
உருண்டு முழங்கி அலறித் தீ நரகத்தில் விழுவார்."
| 55 |
சுற்றத்தார்
வேண்டுமன்றோ மறையுட் கொள்ளா
சுற்றத்தோ
டீங்கந்தோ வென்றும் வேவோஞ்
செற்றத்தால் முந்தையர்தீ வழியை நீங்கா
சிதைந்திவரோ
டடர்ந்தெரிதீ யாழ்ந்தோ மந்தோ.
குற்றத்தா லுலகியற்கை பிறழா தண்ணிக்
கொண்டபய
னிதாவந்தோ வந்தோ வின்பப்
பெற்றத்தா லிதோகெட்டோ மந்தோ வென்று
பின்றாநச்
சுயிர்பொன்றா தென்றும் வேவார். |
| |
" 'சுற்றத்தார்
வேண்டும் அன்றோ, மறை உள் கொள்ளா,
சுற்றத்தோடு ஈங்கு, அந்தோ, என்றும் வேவோம்!
செற்றத்தால், முந்தையர் தீ வழியை நீங்கா, சிதைந்து இவரோடு,
அடர்ந்து எரி தீ ஆழ்ந்தோம், அந்தோ!
குற்றத்தால், உலகு இயற்கை பிறழாது, அண்ணிக்
கொண்ட பயன் இதோ, அந்தோ, அந்தோ! இன்பப்
பெற்றத்தால் இதோ கெட்டோம் அந்தோ!" என்று,
பின், தாம் நச்சு உயிர் பொன்றாது, என்றும் வேவார்.
|
|