|
"அந்தப் பாவிகள்,
'ஐயோ! நமது சுற்றத்தார் உறவு நமக்கு
வேண்டுமென்று அல்லவா, மெய் வேதத்தை உள்ளத்தில்
ஏற்றுக்கொள்ளாதிருந்து, இங்கு அச்சுற்றத்தாரோடு என்றும் வேவோம்! ஐயோ,
பிடிவாதத்தால், முன்னோர் சென்ற தீய வழியை விட்டு விலகாதிருந்து, இம்
முன்னோரோடு நாமும் சிதைந்து, மூண்டு எரியும் நரகத் தீயில் ஆழ்ந்தோம்!
உலக நடப்பு பிறழாதிருக்கவென்று, குற்றத்தால் அதனோ ஒட்டிக் கொண்ட
பயன் இதுவே, ஐயோ, ஐயோ! இன்ப நாட்டத்தால் ஐயோ, இவ்வாறு
கேட்டுக்கு ஆளானோம்!' என்றெல்லாம் புலம்பி, பின், தாம் அழிய
வேண்டமென்று விரும்பும் உயிர் அழியப் பெறுதலும் இல்லாது, என்றும்
வெந்துகொண்டே இருப்பார்.
'பின்றா நச்சு
உயிர் பொன்றாது' எனப் பதம் பிரித்து, 'மாறாத
(குறையாத) நஞ்சினைக் குடித்த தம் உயிரும் சாகாமல்' என உரையாசிரியர்
இருவரும் இயைந்து கூறும் உரை பொருந்து மேற் கொள்க. 'வேண்டு
மன்றோ' என்றவிடத்து, 'என்று' என்ற சொல்லை இடைப்பெய்து,
'வேண்டுமென் றன்றோ' எனக் கூட்டி உரை கொள்க.
| 56 |
அன்றின்னா
னிருவினைக்கும் பயனுய்த் தெய்தற்
கரசொக்கும்
வடிவொக்கப் பொலிந்து தோன்ற
வின்றன்னா னீதிமுறை பிறழா நேர்சென்
றிருபற்றற்
றொழுகுநெறி யெவக்குங் காட்டச்
சென்றின்னாப் பயத்தபொருள் புகழின் பெல்லாஞ்
செகுத்தெம்மை
யளிப்பதற்கே யெளிய வேடம்
நன்றென்னா முகைமுகத்துக் குழவி யானா
னவைக்கிறுதி
நவைகொண்டோர்க் குறுதி யானான். |
| |
"அன்று, இன்னான்
இரு வினைக்கும் பயன் உய்த்து எய்தற்கு,
அரசு ஒக்கும் வடிவு ஒக்கப் பொலிந்து தோன்ற,
இன்று அன்னான் நீதி முறை பிறழா நேர் சென்று
இரு பற்று அற்று ஒழுகும் நெறி எவர்க்கும் காட்டச்
சென்று, இன்னாப் பயத்த பொருள் புகழ் இன்ப எல்லாம்
செகுத்து, எம்மை அளிப்பதற்கே எளிய வேடம்
நன்று என்னா, முகை முகத்துக் குழவி ஆனான்;
நவைக்கு இறுதி, நவை கொண்டோர்க்கு உறுதி ஆனான்." |
|