|
"இறுதித் தீர்ப்பு
நாளன்று, இவ்வாண்டவன் அவரவர் செய்த நல்வினை
தீவினை என்னும் இரு வினைக்கும் தக்க பயனை அடையச் செலுத்தும்
பொருட்டு, அரசனை ஒக்கும் உருவம் பொருந்தப் பொலிவுடன் வந்து
தோன்றுவான். அவனே, இந்நாளில், நீதி முறை தவறாத நேர் வழியில்
தானே முதற்கண் நடந்து, தான் என்னும் அகப்பற்றும் தனது என்ற புறப்
பற்றும் ஆகிய இருவகைப் பாவப் பற்றும் நீக்கி ஒழுகும் நெறியை
எல்லோருக்கும் காட்டவென்று வந்து, பாவத் தீங்கைப் பயப்பனவாகிய
பொருள் புகழ் இன்பம் ஆகியவற்றையெல்லாம் ஒழித்து, நம்மை மீட்டுக்
காப்பதற்கு எளிய கோலமே நல்லதென்று தெரிந்து, மலரும் பருவ
மொட்டுப் போன்ற முகங் கொண்ட குழந்தை ஆனான்; அதன் மூலம்,
பாவத்தை அழிப்பவனும், பாவம் கொண்டுள்ள மனிதர் அதினின்று
விடுபடுவதற்கு உறுதி நிலையும் ஆனான்."
'பயன் உய்த்து
எய்தற்கு' என்பதனை, 'பயன் எய்த உய்த்தற்கு' என
மாற்றிக் கூட்டுக.
| 57 |
இன்பருந்தி
நாமுண்ட விடத்தைத் தீர்க்க
வியல்பாங்கைப்
பென நாமே யுண்டா னன்றே
துன்பருந்தித் தான்மருந்து நமக்கே யாகித்
துயர்துய்த்த
பயனெல்லா நமக்கே யீவா
னன்பருந்தி யமுதேந்து மணிக்க லத்தி
னன்னானென்
றிறைஞ்சினடாய் துயர்மு னின்பம்
பின்பருந்திக் கேட்டெவரும் வணங்கி நிற்பப்
பேரறிவோங்
கியசாந்தி தொழுது சொல்வாள். |
| |
"இன்பு அருந்தி,
நாம் உண்ட விடத்தைத் தீர்க்க
இயல்பு ஆம் கைப்பு என, நாமே உண்டால் நன்றே.
துன்பு அருந்தி, தான் மருந்து நமக்கே ஆகி,
துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான்,
அன்பு அருந்தி, அமுது ஏந்தும் மணிக் கலத்தின்
அன்னான்" என்று இறைஞ்சினள் தாய். துயர் முன் இன்பம்
பின்பு அருந்திக கேட்டு எவரும் வணங்கி நிற்ப,
பேர் அறிவு ஓங்கிய சாந்தி தொழுது சொல்வாள்:" |
|