| 61 |
தேன்றோய்நய
நாமுண வாஞ்செயிர்தீர்
வான்றோயமு தொத்தம ருந்திடவோ
யூன்றோயுட னோயுறு கைப்பயில்வாய்
கான்றோய்மல ரேயுயிர் செய்கனியே. |
| |
"தேன்
தோய் நயம் நாம் உண ஆம் செயிர் தீர்
வான்
தோய் அமுது ஒத்த மருந்து இடவோ,
ஊன் தோய் உடல் நோய் உறு கைப்பு அயில்வாய்?
கான் தோய் மலரே, உயிர் செய் கனியே! " |
மணம் பொருந்திய
மலர் போன்றவனே, உயிர் தரும் கனி
போன்றவனே! நாங்கள் தேன் தோய்த்தாற் போன்ற சிற்றின்பத்தை நுகர
முற்படுவதனால் உண்டாகும் பாவத்தைத் தீர்க்கும் வானுலகிலுள் அமுதம்
போன்ற மருந்தைத் தருவதற்கென்றோ, நீ ஊனாலாகிய உன் உடலுக்குத்
துன்பம் தருவதாகிய கசப்பு மருந்தை உண்பாய்?
| 62 |
மண்ணோர்கள்வ
ருந்தில வாழ்வயில
விண்ணோர்தொழு மோர்தனி வேந்தெனுநீ
புண்ணோகவு டற்றுயர் பூத்திடவோ
கண்ணோர்மணி யேகனி வாருயிரே. |
| |
"மண்ணோர்கள்
வருந்து இல வாழ்வு அயில,
விண்ணோர் தொழும் ஓர் தனி வேந்து எனும் நீ,
புண் நோக உடல் துயர் பூத்திடவோ?
கண் ஓர் மணியே, கனிவு ஆர் உயிரே! " |
"கண்ணுக்கு ஒப்பற்ற
கருவிழி போன்றவளே, கனிவு நிறைந்த
உயிராய் அமைந்தவனே! வானவர் தொழும் ஒரு தனி வேந்தனாகிய நீ,
இம் மண்ணுலகத்தோர் வருத்தம் இல்லாத பேரின்ப வாழ்வை அனுபவிக்கும்
பொருட்டு, உடல் புண்பட்டு நோகத் துன்பம் அடைதல் தகுமோ? "
| 63 |
பைநாகமெ
னாப்பல மின்னலெரீஇக்
கைநாகமெ னாக்கடி தார்த்துநிறை
பெய்நாகமெ னாபிதிர் வந்தனைகன்
மைநாகமெ னாவுரு கோமனநாம். |
|