"பை நாகம் எனாப்
பல மின்னல் எழீஇ,
கை நாகம் எனாக் கடிது ஆர்த்து, நிறை
பெய் நாகம் எனா, பதிர் வந்தனை; கல
கை நாகம் எனா உருகோம் மனம் நாம்! " |
"படம் விரித்த
பாம்பு போலப் பல மின்னல்களைத் தோற்றுவித்து,
துதிக்கை கொண்ட யானை போல மிக முழங்கி, நிறைய மழையைப்
பொழியும் வானம் போல அங்கிருந்து பெயர்ந்து நீ இங்கு இறங்கி
வந்தாய்: நாங்களோ, கருங்கல் மலைபோல மனம் உருகாதிருக்கின்றோம்! "
| 64 |
அறவீடுமி
லாரறி வீடுமிலார்
திறவீடுமி லாரிடை சேர்பயனா
லுறவீடுமி லாவுறை வீடுமிலாப்
புறவீடுமி லாப்பிணி பூத்தழுவாய். |
| |
"அற
ஈடும் இலார் அறிவு ஈடும் இலார்
திற
ஈடும் இலார் இடை சேர் பயனால்,
உறவு
ஈடும் இலா உறை வீடும் இலாப்
புற
ஈடும் இலாப் பிணி பூத்து அழுவாய்! " |
"அறத்தின் பெருமையும்
அறிவின் பெருமையும் வலிமையின்
பெருமையும் இல்லாத மனிதரிடையே நீ வந்து சேர்ந்ததன் பயனால்,
உறவுத் துணையும் இல்லாத தங்கும் வீடும் இல்லாத வேறு பெருமையும்
இல்லாத துன்பத்தோடு தோன்றி இவ்வாறு அழுது கொண்டிருப்பாய்! "
| 65 |
புகையாடிய
காடெனு மிப்புவியே
பகையாடிய தல்லது பண்புளதோ
நகையாடுவர் நாளியெ னக்கஞறி
மிகையாடுவர் நின்விழை வாற்றுவரே. |
| |
"புகை ஆடிய காடு
எனும் இப் புவியே,
பகை ஆடியது அல்லது, பண்பு உளதோ?
நகை ஆடுவர்; நாளி எனக் கஞறி
மிகை ஆடுவர்; நின் விழைவு ஆற்றுவரே! " |
|