பக்கம் எண் :

முதற் காண்டம்677

     "புகை படர்ந்த சுடுகாடு என்று சொல்லத்தக்க இவ்வுலகம், பகை
காட்டி வாழ்வது என்பதல்லாமல், நற்பண்பு ஏதேனும் கொண்டுள்ளதோ?
இவ்வுலகத்தவர் உன் எளிமை கண்டு எள்ளி நகையாடுவர்; நாய்போல
நெருங்கி வந்து துன்பம் செய்வர்; இவ்வாறு, துன்புற வேண்டுமென்ற
உன் ஆசையை நிறைவேற்றி வைப்பர். "


               66
பிணியாசையி லெய்தினை யோபிணியே
பணியாசையின் மேனிறை யாக்குவரே
கணியாவருள் மாகைக ருத்திதுவோ
மணியாரணி யேமறை யின்றிருவே.
 
"பிணி ஆசையில் எய்தினையோ?
பிணியே அணி ஆசையின் மேல் நிறை ஆக்குவரே!
கணியா அருள் மா கை கருத்து இதுவோ?
மணி ஆர் அணியே, மறையின் திருவே! "

     "மாணிக்கம் நிறையப் பதித்த மாலை போன்றவனே, வேதத்தின்
செல்வமாக விளங்குபவனே! கணக்கில்லாத அருட்பெருஞ் செயலின் கருத்து
இதுவோ? துன்பத்தின் மீது ஆசை கொண்டு இங்கு வந்து சேர்ந்தாயோ'
ஆயின், நீ தாங்கிய ஆசையின் மேலும் நிறைவாக இவ்வுலகத்தார்
அத்துன்பத்தையே உனக்குச் செய்து முடிப்பர்! "
 
              67
இடிமொய்த்தன வெல்வையி ருங்கரிகள்
பிடியைத்தழு விப்பிணி யாற்றுவன
மடியுற்றிளங் குஞ்சுகள் மாள்குமென
முடிமொய்த்துறை முற்பெடை தாங்குவன.
 
"இடி மொய்த்தன எல்வை, இருங் கரிகள் ,
பிடியைத் தழுவிப் பிணி ஆற்றுவன,
மடி உற்று இளங் குஞ்சுகள் மாள்கும் என,
முடி மொய்த்து, உறை முன், பெடை தாங்குவன. "