"இடிகள்
திரண்ட கலத்தில், பெரிய ஆண் யானைகள் தம் பெண்
யானைகளைத் துதிக்கையால் தழுவி நின்று அத்துன்பத்தை ஆற்றும்.
மழையில் தம் இளங்குஞ்சுகள் சோர்வுற்று இறக்குமென உணர்ந்து,
பெட்டைப் பறவைகள் தம் இறகுகளால் மூடி நின்று அவற்றைக் காக்கும். "
இது அடுத்த பாடலோடு
தொடர்ந்து கருத்து நிறைவு பெறும்.
| 68 |
நெடுமூவுல
காக்கிய நீயெனினுஞ்
சுடுசூழழ லாற்றிட வுஞ்சுழலப்
படுவிண்மழை தாங்கிட வும்பரிவற்
றிடுமொன்றில தாமரு மாய்கையிதே. |
| |
"நெடு
மூ உலகு ஆக்கிய நீ எனினும்,
சுடு
சூழ் அழல் ஆற்றிடவும், சுழலப்
படு
விண் மழை தாங்கிடவும், பரிவு அற்-
றிடும்
ஒன்று இலது, ஆம் அரு மாய்கை, இதே! |
"நெடிய உலகங்கள்
மூன்றையும் நீயே உண்டாக்கியவனாய் இருந்தும்,
சுற்றிலும் சுடும் வெப்பத்தை ஆற்றிக்கொள்ளவும், சுழன்று பெய்யும் வானத்து
மழையைத் தாங்கி ஒதுங்கவுமாக, துன்பத்தைப் போக்கும் புகலிடம் ஒன்று
இல்லாது போன இதுவே, புரிந்து கொள்வதற்கு அரிய புதிர் ஆகும்! "
| 69 |
பொய்யாவிதி
யோய்பொரு வாவருளோ
யுய்யாவுல கென்னிலு னக்கிழிவோ
வய்யாபய னிற்கித னாகுவதோ
கொய்யாவலி யேகுறை யாத்திருவே. |
| |
"பொய்யா
விதியோய், பொருவா அருளோய்!
உய்யா
உலகு என்னில், உனக்கு இழிவோ?
அய்யா,
பயன் நிற்கு இதன் ஆகுவதோ?
கொய்யா
வலியே, குறையாத் திருவே! " |
|