"பொய்படுதல்
இல்லாத விதிமுறைகளை உடையவனே, ஒப்பற்ற அருள்
கொண்டவனே, பறிக்கப்படாத வலிமை உடையவனே, குறையாத செல்வம்
படைத்தவனே! இவ்வுலகம் வாழ்வு பெறாது போகுமாயின், அதனால் உனக்கு
இழிவு ஏற்படுமோ? ஐயோ, அது வாழ்வு பெறுவதாகிய இதன் மூலம் உனக்கு,
இல்லாத பயன் எதுவும் புதிதாய் ஆவது உண்டோ?"
| 70 |
விடியாவிருள்
மூடிய மேதினிமேன்
முடியாவொளி முற்றிய செஞ்சுடரே
யடியாளுயி ரேயணி யேயெனமெற்
கொடியாடென நொந்துகு ழைந்தழுவாள். |
| |
"விடியா
இருள் மூடிய மேதினி மேல்
முடியா
ஒளி முற்றிய செஞ் சுடரே,
கடியாள்
உயிரே, அணியே!" என, மெய்
கொடி
ஆடு என, நொந்து குழைந்து அழுவாள். |
"விடியாத
இருள்மூடிக் கிடந்த இவ்வுலகில் முடிவில்லாத ஒளியை
நிறைவாகத் தர வந்துதித்த ஞாயிறு போன்றவனே, உனது அடியாளாகிய
எனக்கு உயிர் போன்றவனே, அணிகலன் போன்றவனே!" என்று கூறி,
மெல்லிய கொடியொன்று அசைந்தாடுதல்போல் சாந்தி நொந்து குழைந்து
அழுவாள்.
இடையரின்
உணர்ச்சிப் பெருக்கு
| 71 |
அழுவாரெவ
ரும்மயர் வாரெவருந்
தொழுவார்புகழ் வார்துணர் மெல்லடிமேல்
விழுவார்சிர மேற்கொளு வார்மிடைவா
ரெழுவார்நணு வார்பெய ராரினிதே. |
| |
அழுவார்
எவரும்; அயர்வார்; எவரும்,
தொழுவார்;
புகழ்வார்; துணர் மெல் அடி மேல்
விழுவார்;
சிர மேல் கொளுவார்; மிடைவார்;
எழுவார்;
நணுவார்; பெயரார் இனிதே. |
குழந்தை நாதனின்
எளிமைக் கோலத்தைக் கருதி இடையர் யாவரும்
அழுவார்; சோர்வார்; தொழுவார்; புகழ்வார்; பூப்போன்ற மெல்லிய
|