| 74 |
|
சிலர் நீதிசெ
ழுந்திறல் பாடுவரே
சிலரார்வவி ருந்திரு வோதுவரே
சிலர்தீதுசெ யும்பகை செப்புவரே
சிலர்தேடிய தீமைக லுழ்குவரே.
|
| |
சிலர்
நீதி, செழுந் திறல் பரடுவரே.
சிலர் ஆர்வ இருந் திரு ஓதுவரே.
சிலர் தீது செயும் பகை செப்புவரே.
சிலர் தேடிய தீமை கலுழ்குவரே. |
சிலர்
இறைவனின் நீதியையும் செழுமையான வல்லமையையும்
போற்றிப்பாடுவர். வேறு சிலர் இறைவனின் அன்பு என்னும் பெருஞ்
செல்வத்தைப்பற்றிப் பேசுவர். மற்றும் சிலர் பாவத்தைச் செய்யத்
தூண்டும் பகையைப் பற்றி எடுத்துச் சொல்வர். இன்னும் சிலர் தாமே
தேடிக்கொண்ட பாவத்தை நினைந்து அழுவர்.
| 75 |
சிலர்தாளிணை
சென்னியி லேற்றுவரே
சிலரேற்றிய சேவடி நீவுவரே
சிலர்பூவணி சீறடி சூடுவரே
சிலர்வாள்விழி முத்தணி சேர்க்குவரே. |
| |
சிலர் தாள்
இணை சென்னியில் ஏற்றுவரே.
சிலர் ஏற்றிய சே அடி நீவுவரே.
சிலர் பூ அணி சீறு அடி சூடுவரே.
சிலர் வாள் விழி முத்து அணி சேர்க்குவரே. |
சிலர் குழந்தை
நாதனின் இரு கால்களையும் தம் தலைமேல் ஏற்றி
வைத்துப் போற்றுவர். அவ்வாறு ஏற்றி வைத்த செந்நிறக் கால்களை வேறு
சிலர் தடவிக் கொடுப்பர். சிலர் அச்சிறிய கால்களுக்குப் பூமாலை சூட்டுவர்.
மற்றும் சிலர் தம் வாள் போன்ற கண்ணினின்று பிறக்கும் நீராகிய முத்தை
அணியாக அக்கால்களிற் சேர்ப்பர்.
|