| அறம்
வளர்த்த சூசை
தேமா, தேமா,
கூவிளம், தேமா, புளிமாங்காய்
| 80 |
செல்லைத்
தாராய்ச் சூடிய குன்றிற் றிரிகின்ற
முல்லைத் தாரா ரித்தலை பன்னாள் முறையெஞ்சா
தெல்லைத் தாரா யேந்திய வெந்தை தொழவம்பூ
வில்லைத் தாராய் வேய்ந்தன னன்பார் விதிசொல்வான். |
| |
செல்லைத் தாராய்ச்
சூடிய குன்றில் திரிகின்ற
முல்லைத் தாரார், இத் தலை பல் நாள் முறை எஞ்சாது,
எல்லைத் தாராய் ஏந்திய எந்தை தொழ, அம் பூ
வில்லைத் தாராய் வேய்ந்தனன், அன்பு ஆர் விதி சொல்வான் |
மேகத்தை மாலையாய்ச்
மூடிய மலையில் மந்தை மேய்த்துத் திரியும்
முல்லை மாலை அணிந்த இடையர், இக்குகையிடத்துப் பல நாளும் முறை
தவறாமல் வந்து, ஒளியையே மாலையாய்க் கொண்டுள்ள நம் தந்தையாகிய
குழந்தை நாதனைத் தொழ வந்தனர். தன் மலர்க்கொடியிலுள்ள அழகிய
பூவின் ஒளியை மாலையாய் அணிந்து கொண்டவனாகிய சூசை, அவர்களுக்கு
அன்பை அடிப்படையாய்க் கொண்ட வேத விதிகளை எடுத்துக் கூறுவான்.
| 81 |
சொல்லுந்
தன்மை பொன்பொழி மாரித் துளிவெற்பிற்
புல்லுந் தன்மை தண்பட வுள்ளம் பொலிவெய்திச்
செல்லுந் தன்மைத் தேழ்மடி யோங்கத் தெளிஞான
மொல்லுந் தன்மைத் தொள்ளற முற்றே கதியுற்றார். |
| |
சொல்லும் தன்மை
பொன் பொழி மாரித் துளி வெற்பில்
புல்லும் தன்மை தண்பட உள்ளம், பொலிவு எய்திச்
செல்லும் தன் மைத்து, ஏழ் மடி ஓங்கத் தெளி ஞானம்
ஒல்லும் தன் மைத்து, ஒள் அறம் உற்றே கதி உற்றார். |
சூசை
இவ்வாறு சொல்லும் தன்மையால், பொன்னைப் பொழியும்
மழைத்துளி மலையில் பொருந்தும் முறையில் அவ்விடையர் மனம்
குளிர்ச்சியடைந்து, அவ்வழியில் பொலிவோடு நடந்தனர். அதன் மூலம்,
தெளிந்த ஞானம் ஏழு மடங்காய்ப் பெருகிப் பொருந்தியமையால்,
நல்லறத்தைப் பொருந்தி நின்று நற்கதிக்கு உரியவரானார். |