அணிக் கலத்து
அழகு அழுந்திய உருக் கொடு அமரர்,
மணிக் கலத்து அமுது உய்த்து என, வணங்கி, ஆங்கு
உய்த்த
பிணிக் கலத்திடைக் கிடந்து உறை குழவி தன் பெயரைப்
பணிக் கலத்திடைப் படைத்து, உலகு உய்ந்து எழப்
பகர்வாம். |
வானவர், அழகிய
அணிகலனில் மேலும் அழகு அழுந்தப் பதிந்தது
போன்ற உருவம் எடுத்து வந்து வணங்கி, மாணிக்கக் கலத்தினுள்
அமுதத்தை இட்டுக் கொணர்ந்தது போல் அங்குக் கொணர்ந்து தந்த
துன்பமென்னும் கப்பலில் கிடந்து வாழ வேண்டிய அக் குழந்தையின்
பெயரைச்சொல் என்னும் கலத்துள் படைத்து, உலகமெல்லாம் உய்வு
பெற்று எழுச்சிகொள்ளுமாறு எடுத்துக் கூறுவோம்.
| 88 |
மட்டு
வாய்விளா மணிமுகை மணமுயிர்த் தன்ன
கட்டு வாய்விளாக் கன்னிதன் மகவினை யீன்ற
வெட்டு நாளுமா யிரவியா யிரரென விரவி
சிட்டு வானெழா முன்னராங் கமரரே திளைத்தார். |
| |
மட்டு வாய் விளா
மணிமுகை மணம் உயிர்த்து அன்ன,
கட்டு வாய் விளாக் கன்னி தன் மகவினை ஈன்ற
எட்டு நாளும் ஆய், இரவி ஆயிரர் என, இரவி
சிட்டு வான் எழா முன்னர், ஆங்கு அமரரே திளைத்தார். |
வாய் திறவாத
அழகிய மொட்டு தேன் மணத்தை வெளிப்படுத்தியது
போல், கன்னிமைக் கட்டின் வாய் திறவாத கன்னி தன் குழந்தையைப்
பெற்றெடுத்த எட்டாம் நாளும் வந்து சேரவே, ஆதவன் அழகிய வானத்தில்
எழுவதற்கு முன்னரே, ஆயிரம் ஞாயிறு போல அங்கு வானவர் வந்து
திரண்டனர்.
'மட்டு மணம்'
எனச் சேர்க்க. 'இரவி ஆயிரர்' இல்பொருள் உவமை
அணி.
| 89 |
வம்பொன்
னாடைமேற் செம்பொனால் வரைந்தன வண்ணத்
தம்பொன் மார்பின்மே லழற்கொழுந் தழற்றென வணிந்த
செம்பொன் னாறிரு நாமமே செறிந்தபே ரணியாய்ப்
பைம்பொன் மேனியர் பரப்பொளி பருகிவில் செயுமால். |
|