|
அங்கள் - அழகைக்
குறிக்கும் 'அம்' என்ற சொல்லின் பன்மை.
| 91 |
ஆர
ணிக்கெழு மிக்கயேல் கபிரியே லன்ன
பேர ணிக்கிரு தலைவரின் பெற்றியின் றோன்றித்
தேர ணிக்கிருஞ் செஞ்சுட ரழகுறத் தீட்டு
மேர ணிக்கினை யேமமேற் றிருப்பெய ரணிந்தார். |
| |
ஆர் அணிக்கு
எழு மிக்கயேல் கபிரியேல், அன்ன
பேர் அணிக்கு இரு தலைவரின் பெற்றியின் தோன்றி,
தேர் அணிக்கு, இருஞ் செஞ்சுடர் அழகு உறத் தீட்டும்
ஏர் அணிக்கு இணை, ஏமம் மேல் திருப் பெயர் அணிந்தார். |
நிறைந்த அழகோடு
எழுந்து வந்த மிக்கயேல் கபிரியேல் என்ற
இருவானவரும், அந்தப் பெரும் படையணிக்கு இரு தலைவரென்ற
தன்மையாய் அமைந்து, தாம் தேர்ந்து கொண்ட அணிக்கென்று, பெரிய
கதிரவனை அழகுபடுத்தித் தீட்டும் அழகிய மார்பணிக்கு இணையாக, தம்
கேடயத்தின் மேலும் அத்திருப் பெயரைப் பொறித்து அணிந்து நின்றனர்.
'ஆரணிக்கு' என்பது
'அணியொடு' என்பதன் உருபு மயக்கம்.
| 92 |
தகடு வைத்தபொன்
பரப்பின்வாய் முத்தணி தவழ
முகடு வைத்தபைம் மணியொடு குருமணி முடியா
யகடு வைத்தவான் மணியினா லழகெழுத் தெழுதித்
துகடு டைத்தவன் றூய்திரு நாமம்வேய்ந் ததுவே. |
| |
தகடு வைத்த பொன்
பரப்பின் வாய் முத்து அணி தவழ.
முகடு வைத்த பைம் மணியொடு குரு மணி முடியாய்,
அகடு வைத்த வால் மணியினால் அழகு எழுத்து அழுத்தீ,
துகள் துடைத்தவன் தூய் திரு நாமம் வேய்ந்ததுவே. |
தகடாக அடித்து
வைத்த பொன்னாலாகிய அக்கேடயத்தின்
மேற்பரப்பில் முத்துமாலை தவழ, உச்சியில் பதித்து வைத்த பச்சை
மரகதத்தோடு செந்நிறப் பவளமும் சேர்ந்து முடி போல் விளங்க, நடுவிலே
வைத்த வெண்ணிறமான வைரத்தினால் அழகிய எழுத்து வடிவம் பதித்து,
பாவங்களைத் துடைக்க வந்த குழந்தை நாதனின் தூய திருப்பெயர்
விளங்கியது.
|