| 97 |
பொய்யும்
போவன போவன பொருந்திய புரைக
ளையும் போவன வாகுலம் போவன வலகை
மொய்யும் போவன முதிர்ந்தநோய் போவன மற்றும்
மையும் போவன வகுத்தவித் திருப்பெயர் வயத்தால் |
| |
"பொய்யும் போவன;
போவன பொருந்திய புரைகள்;
ஐயும் போவன; ஆகுலம் போவன; அலகை
மொய்யும் போவன; முதிர்ந்த நோய் போவன; மற்றும்
மையும் போவன, வகுத்த இத் திருப் பெயர் வயத்தால்! |
நாவால் முறைப்படி
சொல்லிய இத்திருப் பெயரின் வல்லமையால்,
பொய்களும் விலகிப் போகும்; பொருந்தியுள்ள பாவங்களும் நீங்கிப்
போகும்; ஐயங்களும் அகன்று போகும்; துன்பங்களும் மாறிப் போகும்;
பேயின் போர்களும் அழிந்து போகும்; முதிர்ந்த நோய்களும்
தீர்ந்துபோகும்; ஏனைய மயக்கங்களும் மறைந்து போகும்!
| 98 |
நோயு
மொக்குமே னுகர்ந்துயிர் தருமருந் தொக்கும்
பேயு மொக்குமேல் வெற்றியைப் பெறும்படை யொக்குந்
தீயு மொக்குமேற் றீர்த்தருஞ் செல்கதி யுய்க்குந்
தாயு மொக்குமே தருமனன் புய்க்குமிந் நாமம். |
| |
"நோயும் ஒக்குமேல்,
நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒக்கும்;
பேயும் ஒக்குமேல், வெற்றியைப் பெறும் படை ஒக்கும்;
தீயும் ஒக்குமேல், தீர்த்து, அருஞ்செல் கதி உய்க்கும்;
தாயும் ஒக்குமே, தருமன் அன்பு உய்க்கும் இந்நாமம்! |
"நீதிமானாகிய
கடவுளின் அன்புக்கு நம்மையெல்லாம் இட்டுச்செல்லும்
இத் திருப்பெயர், நோய் வந்து சேருமாயின், அருந்தி உயிரைக் காக்கும்
மருந்துக்கு ஒப்பாகும்; பேய் வந்து சேருமாயின், அதனை
வெற்றிகொள்வதற்கான படைக்கருவிக்கு ஒப்பாகும்; பாவத்தீமை
வந்தடையுமாயின், அதனைப் போக்கிச் செல்ல வேண்டிய அரிய கதியாகிய
வான்வீட்டிற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும். பேணும் முறையால்
தாயையுமே ஒக்கும்!
|