பக்கம் எண் :

முதற் காண்டம்696

                 மூவரசர் தொழுகை

     - - காய், - - காய், - - காய், - - காய், - மா, தேமா
 
                      103
வையத்தார் திருவிரும்பி மறுவுற்றா ரென்றெளிமை வடிவம்
                                         பூண்டு
மெய்யைத்தா னுலகுணர்த்த விருப்பமொடு மனுவாய விசய
                                         வேந்தன்
பொய்யற்றார் வலிதன்மை பூதலத்திற் றோற்றுவிப்பப் புகழுற்
                                         றாய்ந்த
வையற்றா ரறிவுடைமூ வரசரைத்தன் றாடொழுவா னழைத்தல்
                                         சொல்வாம்.
 
வையத்தார் திரு விரும்பி மறு உற்றார் என்று, எளிமை வடிவம்
                                பூண்டு
மெய்யைத் தான் உலகு உணர்த்த விருப்பமொடு மனு ஆய விசய
                                வேந்தன்,
பொய் அற்ற ஆர் வலி தன்மை பூதலத்தில் தோற்றுவிப்ப, புகழ்
                                உற்று, ஆய்ந்த
ஐ அற்று ஆர் அறிவு உடை மூ அரசரைத் தன் தாள் தொழுவான்
                                அழைத்தல் சொல்வாம்:

     இவ்வுலகத்தார் செல்வத்தை விரும்பிப் பாவத்திற்கு ஆளானார் என்று
அறிந்து, உண்மையை இவ்வுலகிற்கு உணர்த்த விருப்பங் கொண்டு, எளிமைக்
கோலம் பூண்டு, தானே மனிதனாய் அவதரித்து வந்த வெற்றி வேந்தனாகிய
குழந்தை நாதன், பொய்யற்ற தன் நிறை வல்லமையின் தன்மையை இப்
பூவுலகில் புலப்படுத்தும் பொருட்டு, புகழும் கொண்டு, ஐயமற எல்லாம்
ஆராயக் கூடிய நிறைந்த அறிவும் வாய்ந்த அரசர் மூவரைத் தன்
திருவடியைத் தொழுமாறு அழைத்த நிகழ்ச்சியை மேலே தொடர்ந்து
சொல்வோம்:

     அற்ற + ஆர் - 'அற்றவார்' என வரவேண்டியது, 'அற்றார்' எனத்
தொகுத்தல் விகாரம் கொண்டது. மூவரசர் தொழுகைச் செய்தி: மத்தேயு,
2 : 1 12 காண்க.