|
104 |
விண்ணெழுந்த
வெண்மதிய மிதித்தொளிறு மெல்லடியாள்
விரும்பி யீன்ற
வொண்ணெழுந்த திருமகற்கே யுரிகொடியா மெனமறையோ
ருரைத்த
வண்ணங் கண்ணெழுந்த கவின்காட்டிக் கதிர்பொங்கு
நவமீனைக் கடவு டானே
மண்ணெழுந்த நாளிலரு மறைநாப்போற் றோற்றுவித்து
வழங்கல் செய்தான். |
| |
விண் எழுந்த
வெண் மதியம் மிதித்து ஒளிரு மெல் அடியாள்
விரும்பி ஈன்ற
ஒண் எழுந்த திரு மகற்கே உரிகொடி ஆம் என, மறையோர்
உரைத்த வண்ணம்,
கண் எழுந்த கவின் காட்டிக் கதிர் பொங்கு நவ மீனை,
கடவுள் தானே,
மண் எழுந்த நாளில், அருமறை நாப் போல் தோற்றுவித்து,
வழங்கல் செய்தான். |
வானத்தில் எழுந்த
வெண்ணிற மதியை மிதித்து ஒளியுடன் விளங்கும்
மெல்லிய அடியை உடைய மரியாள் விருப்பத்தோடு பெற்றெடுத்த ஒளி
மிகுந்த திரு மகனுக்கே உரிய கொடியாம் இது என்று, முன் வேத நூலோர்
உரைத்த வண்ணம், கண்ணுக்கு எழுச்சியான அழகைக் காட்டிக் கதிர்கள்
மிகுந்த ஒரு புதிய விண்மீனை, அத் திரு மகன் மண்ணுலகிற் பிறந்த நாளில்
அரிய வேதத்தின் நாவு போலக் கடவுளே தோன்றச் செய்து, அடையாளமாக
வழங்கினான்.
'ஒளிர்தல்'
என்பதனை 'ஒளிறுதல்' என்று கூறுவது பண்டை மரபு:
"ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக்
கடனே" (புறம். 312 : 5) என்றது காண்க.
|