பக்கம் எண் :

முதற் காண்டம்698

                     105
நறுநான நறியபுகை நாறுநறு மராபியநன் னாட்டு வேந்தும்
பெறுமான மணிப்புனல்சேர் பேர்சியநா டாண்டருளைப்
                               பிளிர்ந்த வேந்துஞ்
செறுவாகத் தரசன்னந் திளைத்தார்க்குஞ் சபநாட்டுச் சிறந்த
                               வேந்துந்
துறுவாமத் தொளிர்ந்தநவ சுற்கையொடுள் ளறிவெய்தித்
                               தொய்ய லுற்றார்.
 
நறு நானம் நறிய புகை நாறு நறும் அராபிய நல் நாட்டு வேந்தும்,
பெறுமான மணிப் புனல் சேர் பேர்சிய நாடு ஆண்டு அருளைப்
                                 பிளிர்ந்த வேந்தும்,
செறு ஆகத்து அரசு அன்னம் திளைத்து ஆர்க்கும் சப நாட்டுச்
                                 சிறந்த வேந்தும்,
துறு வாமத்து ஒளிர்ந்த நவ சுற்கையொடு உள் அறிவு எய்தித்
                                 தொய்யல் உற்றார்.

     மணமுள்ள கஸ்தூரியும் நறுமணத் தூபப் பொருள்களும் தன்னிடத்துத்
தோன்றுதலால் நாடே மணக்கும் நல்ல அராபிய நாட்டு அரசனும்,
விலைபெறுமானமுள்ள மணிகளைக் கொண்ட ஆறுகள் பொருந்திய பேர்சிய
நாட்டை ஆண்டு அருளைப் பொழிந்த அரசனும், வயல்களிடத்து அரச
அன்னங்கள் திரண்டு ஆரவாரஞ்செய்யும் சப நாட்டுச் சிறந்த அரசனும்,
பெருகிய அழகுடன் ஒளிர்ந்த புதிய விண்மீனைக் கண்டதோடு தம்
உள்ளுணர்வால் அதன் கருத்தை அறிந்து மகிழ்ச்சி கொண்டனர்.

 
                      106
தனத்தினத்துத் துணிவெய்தித் தாரகையைக் கொடி கொண்ட
                               தரணி வேந்தை
மனத்தினத்துத் தொழுதடிகை வணங்குவலென் றவனவனு
                               மனத்திற் றேறி
யினத்தினத்துக் கடறானை யிணைந்துவரக் கோவேந்தை
                               யிறைஞ்சப் போகிற்
கனத்தினத்துத் தாழ்ந்தொளியைக் கான்றுடுவே யரியசுரங்
                              காட்டு மன்றறோ.