பக்கம் எண் :

முதற் காண்டம்699

தனத்து இனத்துத் துணிவு எய்தி, தாரகையைக் கொடி
                        கொண்ட தரணி வேந்தை
மனத்து இனத்துத் தொழுது, "அடியை வணங்குவல்" என்று
                      அவனவனும் மனத்தில் தேறி,
இனத்து இனத்துக் கடல் தானை இணைந்து வரக் கோ
                        வேந்தை இறைஞ்சப் போகில்,
கனத்து இனத்துத் தாழ்ந்து ஒளியைக் கான்று உடுவே, அரிய
                        சுரம் காட்டு அன்றோ.

     தாம் கொண்டிருந்த செல்வத்திற்கு ஒத்த வண்ணம் துணிவு கொண்டு,
விண்மீனைக் கொடியாகக்கொண்ட உலக மன்னனாகிய ஆண்டவனை இனங்
கண்டு மனத்தால் தொழுது, "சென்று அடியையும் வணங்குவேன்" என்று
ஒவ்வொருவனும் தனித் தனியே மனத்தில் தெளிவு கொண்டு, வகை
வகையான கடல் போன்ற சேனை தன்னோடு கூடிவர அரசர்க்கரசனாகிய
அவ்வாண்டவனை வணங்குமாறு செல்லுகையில், அவ்விண்மீனே, மேகக்
கூட்டத்திற்குத் தாழ்வாக நின்று ஒளியைப் பொழிந்து, அரிய வழியைக்
காட்டிச் செல்லும்.

     'அன்றோ' அசை நிலை.
 
                     107
மாறின்றி யிரவுபகல் மல்கொளிகா லோருடுவே வழியைக்
                              காட்ட
வேறின்றித் தடமொன்றை மேவியமூ வரசரொன்றி விழுப்ப
                              மோங்கிக்
காறின்றிக் களிப்புறத்தங் கருத்தெல்லா முணர்ந்துணர்த்திக்
                              கருணை யார்ந்த
வீறின்றி வளம்பூத்த விறையோனை யிறைஞ்சுவதற்
                              கிணைந்து போனார்.
 
மாறு இன்றி இரவு பகல் மல்கு ஒளி கால் ஓர் உடுவே வழியைக்
                                        காட்ட,
வேறு இன்றி, தடம் ஒன்றை மேவிய மூ அரசர் ஒன்றி, விழுப்பம்
                                        ஓங்கி,
காறு இன்றிக் களிப்பு உற, தம் கருத்து எல்லாம் உணர்ந்து உணர்த்தி,
                                        கருணை ஆர்ந்த
ஈறு இன்றி வளம் பூத்த இறையோனை இறைஞ்சுவதற்கு இணைந்து
                                        போனார்.