வட்டம் -
சக்கரம். அரசனது ஆணையைக் கொண்டு இயங்கும்
ஆட்சியை 'ஆணைச் சக்கரம்' என்பதனால், அரசியல் நூல் 'சக்கர நூல்'
எனப்படும். ''சக்கர நெறி நில்,'' என்ற ஒளவையார் வாக்கும்
(ஆத்திசூடி 43) அறிக.
நகர
வளம்
- விளம், விளம், -மா, கூவிளம்
16 |
மழைத்தலை
விலகுப வளர்ந்த மாடங்க
ளிழைத்தலை யரிதினி லிழைத்த வெண்சுதை
பிழைத்தலை யறுத்தொளி பிளிர வெள்ளியந்
தழைத்தலை மலைக்குழாந் தயங்குந் தன்மையே. |
|
மழைத்தலை விலகுப வளர்ந்த மாடங்கள்
இழைத் தலை அரிதினில் இழைத்த வெண் சுதை,
பிழைத்தலை அறுத்து ஒளி பிளிர, வெள்ளி அம்
தழைத் தலை மலைக் குழாம் தயங்குந் தன்மையே. |
மேகங்கள்
தம் உச்சியை விட்டு விலகிச் செல்லுமளவிற்கு உயர்ந்து
நின்ற மாளிகைகளின் அழகிய உச்சிகளில் அரிய தன்மையாய்ப் பூசிய
வெண்ணிறச் சுண்ணாம்புச் சாந்து, அவற்றிலுள்ள குறைகளையெல்லாம்
மறைத்து நீக்குமளவிற்கு ஒளியைச் சிதறுவதனால், அழகு தழைத்த
வெள்ளிச் சிகரங்களைக் கொண்ட மலைக் கூட்டத்தின் தன்மையாய்
விளங்கும்.
'அம் தழை வெள்ளித்
தலை' எனப் பிரித்துக் கூட்டுக.
17
|
பயிற்றிய
முகிலிடை பரந்த பான்மதி
வெயிற்றியங் கியவென வெந்த கிற்புகை
யயிற்றிய வெயிலுமி ழரிய மாமணி
குயிற்றிய மாடங்கள் குளிர நாறுமே |
|
பயிற்றிய
முகில் இடை பரந்த பால் மதி
வெயில் தியங்கிய என, வெந்த அகில் புகை
அயிற்றிய வெயில் உமிழ் அரிய மா மணி
குயிற்றிய மாடங்கள் குளிர நாறுமே. |
|