|
நடை பழகிக்
கொண்டிருந்த மேகம் இடையே பரந்ததனால், உள்ளே
அடங்கிய பால் போன்ற சந்திரனின் ஒளி மங்கியதுபோல, வெந்த அகிற்
கட்டையின் புகையை உண்டதனால் ஒளியை உமிழும் அரிய சிறந்த
மணிகள் பதித்த மாளிகைகள் கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தோன்றும்.
அகிற்
புகை உண்ட மணிகளுக்கு முகில் இடை பரந்த பால்மதி
உவமை. ஒளி மங்கிக் காட்சிக்கு இனிமை பயத்தல் பொதுத் தன்மை.
வெந்த + அகில் - 'வெந்தவகில்' என வரவேண்டியது 'வெந்தகில்' எனத்
தொகுத்தல் விகாரம் கொண்டது.
| 18
|
புலையினார்
மனவிணை வளைவில் பொன்னங்காற்
றலையினார் மனவினைத் தரித்த பூங்கொடி
கலையினார் மனவிணை வெளிறு கான்றுக
முலையினார் மனவிணை முயன்றங் காடுமால். |
| |
புலையினார்
மன இணை வளைவு இல் பொன் அம் கால்
தலையின் ஆர் மனவினைத் தரித்த பூங்கொடி,
கலையினார் மன இணை வெளிறு கான்று உக,
முலையினார் மனஇணை முயன்று அங்கு ஆடும் ஆல் |
நீசர்களின்
மனத்திற்கு ஒப்பாக வளைதல் இல்லாத பொன்மயமான
கம்பத்தின் தலையில் சிறந்த துணியை அணிந்து நின்ற அழகிய
துகிற்கொடி, கற்றோர் மனத்திற்கு இணையாக வெண்மையைக் கக்கிச்
சொரிந்து, முலையுள்ள மகளிர் மனத்திற்கு ஒப்பாக நிலையில்லாது
முயன்று அங்குமிங்குமாக அசைந்து ஆடும்.
'ஆல்' அசைநிலை
'வெளிறு கான்று உக' என்பது, கொடிக்குச்
செல்லுங்கால், 'வெண்மை நிறத்தைக் கக்கிச் சொரிந்து' எனவும்,
கற்றோருக்குச் செல்லுங்கால், 'வெண்மை எனப்படும் அறியாமையைக்
கக்கிச் சொரிந்து' எனவும் பொருள் விரியும்.
| 19 |
கோதகன்
றளிக்குவா ரருத்திக் கொள்கைபோற்
றீதகன் றருந்திரு நுகரச் சென்மினென்
றேதகன் றணிக்குலத் திலங்கு மாடங்கள்
மீதகன் றசைகொடி விளிப்ப மானுமே. |
|