பக்கம் எண் :

முதற் காண்டம்72

கோது அகன்று அளிக்குவார் அருத்திக் கொள்கைபோல்,
'தீது அகன்று அருந்திரு நுகரச் செல்மின்!' என்று
ஏது அகன்று அணிக் குலத்து இலங்கு மாடங்கள்
மீது அகன்று அசை கொடி விளிப்ப மானுமே,

     குறை நீங்கப் பெற்று வரிசையாய்க் கூட்டமாய் விளங்கும் மாளிகைகள்
மீது விரிந்து அசையும் கொடிகள், குற்றமறக் கொடுப்போர் ஆசையோடு
அழைப்பது போல், வறுமைத் தீமை நீங்கி அரிய செல்வத்தை அனுபவிக்கச்
செல்லுங்கள்!' என்று அழைப்பன போல் தோன்றும்.

               20
பேர்த்தன பருதிபோய்ப் பெருகு மாயிரா
போர்த்தன விருளறத் தயங்கும் பொன்மணி
கோர்த்தன தரளமேற் கொழுமுந் தோரண
மார்த்தன முகிலிடை யவிர்வில் மானுமே.
 
பேர்த்தன பருதி போய்ப் பெருகும் மா இரா
போர்த்தன இருள் அறத் தயங்கும் பொன் மணி
கோர்த்தன தரளம் மேல் கொழுமும் தோரணம்,
ஆர்த்தன முகில் இடை அவிர்வில் மானுமே.

     மேற்கு நோக்கிப் பெயர்ந்த கதிரவன் மறைந்து போய்ப் படிப்படியாகப்
பெருகும் பெரிய இரவில் மூடிக் கொண்ட இருள் நீங்குமாறு மாளிகைக்குள்
விளங்கும் பொன்னும் மணிகளும் கோத்துத் தொங்கவிட்ட முத்து மாலையும்
அதன் மேல் தொங்கும் தோரணமுமாகக் கூடி, முழங்கிய மேகத்திடையே
விளங்கும் வானவில்லைப் போன்று விளங்கும்.

     'பேர்த்தன' போன்று அடிதோறும் முதற்கண் விளங்கும் சொற்கள்,
'பேர்த்த' என்பது போல், 'அன்' சாரியை பெற்ற பெயரெச்சங்கள்.

  

                  21
தேனொடு ஞிமிறொடுஞ் செறிந்த தும்பிகள்
வானொடு வழங்கிய மலர்செய் தோரணங்
கானொடு வழிந்ததேன் களித்த மேய்ந்தபின்
னானொடு மிசையொடு மூஞ்ச லாடுமால்.