தேனொடும் ஞிமிறொடும்
செறிந்த தும்பிகள்,
வானொடு வழங்கிய மலர் செய் தோரணம்
கானொடு வழிந்த தேன் களித்து மேய்ந்த பின்
ஆனொடும் இசையொடும் ஊஞ்சல் ஆடும் ஆல். |
தேனீக்களோடும்
கருவண்டுகளோடும் கூடிக் கொண்ட தும்பி
வண்டுகள், வானத்தை எட்டிய மலராலாகிய தோரணங்களிலிருந்து
வாசனையோடு வடிந்த தேனைக் களிப்போடு பருகிய பின், இனிமையோடும்
பாட்டோடும் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்.
தேன், ஞிமிறு,
தும்பி என்பன தேனீயின் பல இனங்கள்.
22
|
கரியினங்
கரியொடுங் கலினம் பூண்டுபாய்
பரியினம் பரியொடும் பரியைப் பூட்டிய
வெரியின மணிசெறி யேமத் தேர்களு
நெரியின நெருங்குப நெரிந்த வாயெலாம். |
|
கரி
இனம் கரியொடும்; கலினம் பூண்டு பாய்
பரி இனம் பரியோடும், பரியைப் பூட்டிய
எரி இன மணி செறி ஏமத் தேர்களும்
நெரியின நெருங்குப நெரிந்த வாய் எலாம். |
யானைக் கூட்டம்
யானைகளோடும், கடிவாளம் பூண்டு பாயும்
குதிரைக் கூட்டம் குதிரைகளோடும், குதிரைகளைப் பூட்டிய ஒளி
பொருந்திய பல இன மணிகள் பொருந்திய பொன்னாலான தேர்களும்
சென்ற இடமெல்லாம் ஒன்றையொன்று நெரித்த வண்ணமாய் நெருங்கிக்
கிடக்கும்.
23 |
பேரொலி
முரசொலி பிளிர்ந்த சங்கொலி,
தேரொலி மதமழை சிதறி யானைக
ளூரொலி யிவுளிக ளொலிம யங்கிமேற்
காரொலி கடலொலி கலங்க விம்முமால். |
|
பேர்
ஒலி, முரசு ஒலி, பிளிர்ந்த சங்கு ஒலி,
தேர் ஒலி, மத மழை சிதறி யானைகள்
ஊர் ஒலி, இவுளிகள் ஒலி மயங்கி, மேல்
கார் ஒலி கடல் ஒலி கலங்க விம்மும் ஆல். |
|