விதமும், தம் கண்களின்
துளையால் அறிதல் இன்றி, கடவுளே தந்த
பேரறிவினால் அறிந்து, அரசர் மூவரும் தம் உள்ளத்தில் வியப்புக்
கொண்டனர்.
112 |
மும்மலைவீழ்ந்
தெனவீழ்ந்து முச்சுடர்போன் மும்முடிகள்
முகிழந் தாளில்
விம்மலைவில் லுறப்பெய்து மேவியநெஞ் சுருகிக்கண் விடுத்த
நீராற்
பொம்மலையிற் பெருகின்பப் புணரியினுண் மூவரங்கண்
பொலிக மூழ்கி
யிம்மலையிற் றொழத்தொழவீழ்ந் தெழுந்தெழுந்து
கோவேந்தை யிறைஞ்சிட் டாரே |
|
மும் மலை வீழ்ந்து
என வீழ்ந்து, முச் சுடர் போல் மும் முடிகள்
முகிழம் தாளில்
விம்மு அலை வில் உறப் பெய்து, மேவிய நெஞ்சு உருகி, கண்
விடுத்த நீரால்
பொம்மு அலையின் பெருகு இன்பப் புணரியினுள், மூவர்
அங்கண், பொலிக மூழ்கி,
இம் மலையின், தொழத் தொழ வீழ்ந்து, எழுந்து எழுந்து, கோ
வேந்தை இறைஞ்சிட்டாரே. |
மூவரும் அங்கு
மூன்று மலைகள் விழுந்தாற் போல விழுந்து, ஞாயிறு,
திங்கள், விண்மீன் என்னும் முச்சுடர் போல் தம் மூன்று முடிகளையும் திருக்
குழந்தையின் மொட்டுப் போன்ற அடியில் மின்னிப் பரக்கும் ஒளி பாயுமாறு
இட்டு வைத்து விரும்பிய தம் நெஞ்சு உருகி, தம் கண் பொழிந்த நீரால்
பொங்கிய அலை போல் பெருகும் இன்பக் கடலினுள் பொலிய மூழ்கி,
இவ்வண்ணமாய், தொழுது தொழுது வீழ்ந்தும், எழுந்து எழுந்து நின்றும்,
அரசர்க் கரசனாகிய அக்குழந்தையை வணங்கலுற்றனர்.
113 |
ஓராழி யுருட்டலின்மூ
வுலகாளுந் தனிமன்னற் குரிய மாடை
நீராழி நிலங்காக்க மாள்வனெனு மதற்குரிய நெய்கொள்
மீறை
யாராழி யறத்திறைவற் கருச்சனைசெய் வதற்குரிய வரிய
தூபம்
பாராழி யுடைமூவர் இம்மூன்றும் பதமலர்முற் பணிந்து
வைத்தார். |
|