ஓர் ஆழி உருட்டலின்,
மூ உலகு ஆளும் தனி மன்னற்கு
உரிய மாடை,
நீர் ஆழி நிலம் காக்க மாள்வன் எனும் அதற்கு உரிய நெய்
கொள் மீறை,
ஆர் ஆழி அறத்து இறைவற்கு அருச்சனை செய்வதற்கு
உரிய அரிய தூபம்,
பார் ஆழி உடை மூவர், இம் மூன்றும், பத மலர் முன்
பணிந்து வைத்தார். |
தன் ஒரே ஆணைச்
சக்கரத்தை எங்கும் செலுத்துதலினால், மூன்று
உலகங்களையும் ஆளும் ஒப்பற்ற மன்னன் என்பதைக் காட்டுவதற்கு உரிய
பொன், நீரால் ஆகிய கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைப் பாவத்தினின்று மீட்டுக்
காக்க மனிதனாக மடிவான் என்னும் அதனைக் காட்டுவதற்கு உரிய மண
நெய்யாகிய மீறை, நிறைந்த அறமென்னும் சக்கரத்தைக் கொண்டுள்ள
கடவுள் என்று காட்டுவதற்கு, வழிபாடு செய்வதற்கு உரிய அரிய தூபம் -
இம்மூன்றையும், உலகத்தை ஆளும் ஆணைச் சக்கரத்தைக் கொண்டுள்ள
அம்மூவரும், அக்குழந்தை நாதனின் திருவடி மலர்முன் பணிவோடு
காணிக்கையாக இட்டனர்,
'மீறை' என்பது
இறந்தவர் உடலிற் பூசி அடக்கம் செய்வதற்கு உரிய
நறுமணத் தைலம். பொன்னால் அரசனும், மீறையால் மனிதனும், தூபத்தால்
கடவுளும் என்று காட்டியவாறு.
114 |
மண்களிப்ப
மனுவானாய் மனம்வருத்த வித்துயர்கொள்
வடிவுற் றாயோ
விண்களிப்ப வுவப்பானாய் வெயில்வடிவ மறைந்தெஞ்ச
மிடிகொள் வாயோ
கண்களிப்ப வுருவானாய் கசடொழிப்ப வுள்ளிரங்கிக்
கலுழ்கு வாயோ
புண்களிப்ப மருந்தானாய் புண்படமாள் வாய்கொலெனப்
புலம்பி நின்றார். |
|