மண் களிப்ப
மனு ஆனாய்: மனம் வருத்த, இத் துயர்
கொள் வடிவு உற்றாயோ?
விண் களிப்ப, உவப்பு ஆனாய்: வெயில் வடிவம் மறைந்து
எஞ்ச மிடி கொள்வாயோ?
கண் களிப்ப உரு ஆனாய்: கசடு ஒழிப்ப உள் இரங்கிக்
கலுழ்குவாயோ?
புண் களிப்ப மருந்து ஆனாய்: புண்பட மாள்வாய்கொல்?"
எனப் புலம்பி நின்றார். |
அவ்வரசர் திருமகனை
நோக்கி, "மண்ணுலகத்தார் மகிழ்ச்சி
கொள்ளுமாறு நீ மனிதன் ஆனாய்: உன் மனத்தை நீயே வருத்திக்
கொள்ளுமாறு, துயரத்துக்கு இலக்கான இம்மனித வடிவத்தைக்
கொண்டாயோ? விண்ணுலகத்தார் மகிழ, நீயே அவர்களுக்கு மகிழ்ச்சியாய்
அமைந்தாய்: ஒளி பொருந்திய உன் உண்மை வடிவம் முற்றிலும் மறைந்து
குறைபட வறுமையை ஏற்றுக் கொள்வாயோ? கண்ணுடையவரெல்லாம்
களிக்குமாறு உருவம் எடுத்துக் கொண்டாய்: பாவக் கசடு நீங்குமாறு, மனம்
இரங்கி அழுவாயோ? புண்ணுற்றவர் மகிழும் பொருட்டு மருந்தாக நீ
அமைந்தாய்: நீயே புண்பட்டு மடிவாயோ?' என்று புலம்பி நின்றனர்.
மண், விண்,
கண், புண் என்பன ஆகு பெயராய் அவற்றோடு
தொடர்புடையாரைக் குறித்தன.
115 |
மூவுலகும் பொதுவறவாள்
முதிர்கருணை வேந்திவரை முகம
னோக்கி
பூவுலகுங் களிகூரப் புகலாபூங் கரத்தாசி புரித லோடு
மேவலகு மொன்றின்றி வெள்ளமென வரங்களெலா மிடையத்
தந்தே
தேவுலகு நிகர் நயத்திம் மூவருமெண் ணிலவாசி செலுத்தி
னாரே. |
|
மூ உலகும் பொது
அற ஆள் முதிர் கருணை வேந்து, இவரை
முகமன் நோக்கி,
பூ உலகும் களி கூர, புகலா, பூங் கரத்து ஆசி புரிதலோடு,
மேவு அலகும் ஒன்று இன்றி வெள்ளம் என வரங்கள் எலாம்
மிடையத் தந்தே,
தே உலகு நிகர் நயத்து இம் மூவரும் எண் இல ஆசி
செலுத்தினாரே. |
|