பக்கம் எண் :

முதற் காண்டம்707

                       117
கோதணிந்த வுலகளிக்குங் குணம்வேண்டி னித்துயரோ
                          குளித்தல் வேண்டும்
போதணிந்த புனல்தவழ்நாம் புரக்கின்ற நாடடைந்து பொதுவற்
                          றாண்டு
நீதணிந்த விவன்பணித்த நெறியொடுநாம் பணிசெய்யா நின்றா
                          லென்னோ
வேதணிந்த தவம்பொய்யா விதிநல்லோ யெனவளனை
                          விரும்பிக் கேட்டார்.
 
"கோது அணிந்த உலகு அளிக்கும் குணம் வேண்டின், இத் துயரோ
                               குளித்தல் வேண்டும்?
போது அணிந்த புனல் தவழ் நாம் புரக்கின்ற நாடு அடைந்து,
                               பொது அற்று ஆண்டு,
நீது அணிந்த இவன் பணித்த நெறியொடு நாம் பணி செய்யா
                               நின்றால் என்னோ,
வேது அணிந்த தவம் பொய்யா விதி நல்லோய்?" என வளனை
                               விரும்பிக் கேட்டார்.

     மூவரசர் சூசையை நோக்கி, வேதத்தை அணிந்துகொண்ட விதமாய்த்
தவத்தில் தவறாத விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் நல்லவனே "பாவத்தை
அணிந்துகொண்ட இவ்வுலகை மீட்டுக் காக்கும் நன்மையை நாடினால்,
இத்தகைய துயரத்திலோ மூழ்க வேண்டும்? மலர்களை நீரின்மேல்
அணிந்தவண்ணம் இழுத்துக் கொண்டு ஆறுகள் பாய நாங்கள் ஆண்டு
கொண்டிருக்கும் நாட்டை அடைந்து, பொதுவென்று இல்லாமல் தானே
ஆண்டு, நீதியை அணிந்து கொண்டுள்ள இவன் கட்டளையிட்ட நெறிக்கு
இணங்க நாங்கள் பணி செய்து நின்றால் என்னவாம்?" என்று கேட்டனர்.
வேதம், நீதம் என்பன, வேது, நீது எனக் கடைக்குறையாய் நின்றன.

                     118
ஒன்றான வயத்துளமூ வுலகரசற் கித்திருவேர் வுலகில்
                          வேண்டுங்
குன்றாத வரமொன்றே குணித்தெய்தி மற்றெவையுங்
                          கோதென் றோர்ந்து
பின்றாத விதிமுறையாற் பிறந்தபிரா னுமதார்வப் பெற்றி
                          யொன்றே
பொன்றாத பொற்பெனக்கொண் டுவப்பனெனப் புகன்றாசி
                          புரிந்தான் சூசை.