"ஒன்று ஆன வயத்து
உள மூ உலகு அரசற்கு இத்திருவோ
உலகில் வேண்டும்?
குன்றாத அறம் ஒன்றே குணித்து எய்தி, மற்று எவையும்
கோது என்று ஓர்ந்து,
பின்றாத விதி முறையால் பிறந்த பிரான், உமது ஆர்வப்
பெற்றி ஒன்றே
பொன்றாத பொற்பு எனக் கொண்டு உவப்பன்" எனப்
புகன்று, ஆசி புரிந்தான் சூசை. |
சூசை அவ்வரசரை
நோக்கி, "ஒப்பற்ற வல்லமையோடு கூடிய
மூவுலக அரசனாகிய ஆண்டவனுக்கு உலகில் இந்த அரசச் செல்வமோ
வேண்டும்? குறையற்ற அறம் ஒன்றையே கருதி இவ்வுலகை அடைந்து,
மற்ற யாவற்றையும் சக்கை என்று மதித்து, அதற்கேற்ப, தப்பாத இந்த
விதிமுறையால் பிறந்த இவ்வாண்டவன், உங்கள் அன்பின் தன்மை
ஒன்றையே அழியாத செல்வமென ஏற்றுக்கொண்டு மகிழ்வான்" என்று
கூறி, ஆசி வழங்கினான்.
119 |
வீங்கொடியா
விம்மிதத்திவ் விதிகேட்டுப் புகழ்ந்திவரை
வேந்த ரேற்றப்
பூங்கொடியா யழிவின்றிப் பூவனைய மகவீன்ற பொருவில்
தாயுந்
தேங்கொடியா லிம்மகற்குச் செகத்தமைந்த கைத்தாதைச்
சிறப்புற் றோனு
மாங்கொடியா வுறுதிச்சொல் லருத்தியினா லிருத்தியர்போ
லயன முன்னார். |
|
வீங்கு ஒடியா
விம்மிதத்து இவ் விதி கேட்டுப் புகழ்ந்து
இவரை வேந்தர் ஏற்ற,
பூங்கொடியாய் அழிவு இன்றிப் பூ அனைய மகவு ஈன்றி
பொருவு இல் தாயும்,
தேன் கொடியால் இம் மகற்குச் செகத்து அமைந்த கைத்
தாதைச் சிறப்பு உற்றோனும்,
ஆங்கு ஒடியா உறுதிச் சொல் அருத்தியினால் இருத்தியர்
போல், அயனம் உன்னார். |
பெருகுதலே யன்றிக்
குறைதல் இல்லாத வியப்புடன் மூவரசர் இவ்
விதிமுறையைக் கேட்டறிந்து, இத்திருக் குடும்பத்தினரைப் புகழ்ந்து போற்றி,
பூங்கொடியாய்த் தன் கன்னிமைக்கு அழிவின்றிப் பூப் போன்ற மகனைப்
|