பெற்ற ஒப்பற்ற தாயும்,
தேனுள்ள மலர்க் கொடியால் இம் மகனுக்கு
இவ்வுலகில் அமைந்த வளர்ப்புத் தந்தை என்னும் சிறப்பைப் பெற்ற
சூசையும், அங்குக் கூறிய தவறா உறுதிச் சொற்களைக் கேட்க
வேண்டுமென்ற ஆசையினால் இருத்தப்பட்டவர்போல் தம் பயணத்தைப்
பற்றி நினையாதிருந்தனர்.
தேங்கொடி -
தேன் + கொடி.
120 |
பணிப்பரிய
குணத்தும்பர் பரமன்றன் பணியென்னப்
பயணங் கூறப்
பிணிப்பரிய உடம்புயிரைப் பிரிந்தாற்போ லுட்டுயரம்
பெருக லோடு
தணிப்பரிய விம்மூவர் தாடொழுதம் மூவரசர் தணந்து
நீங்கி
பணிப்பரிய நெறிவேறு காட்டுடுபின் சென்றுதம தகலுள்
சேர்ந்தார். |
|
பணிப்பு அரிய
குணத்து உம்பர், பரமன் தன் பணி என்னப்
பயணம் கூற,
பிணிப்பு அரிய உடம்பு உயிரைப் பிரிந்தாற் போல், உள்
துயரம் பெருகலோடு,
தணிப்பு அரிய இம்மூவர் தாள் தொழுது, அம் மூ அரசர்
தணந்து நீங்கி,
அணிப்பு அரிய நெறி வேறு காட்டு உடு பின் சென்று, தமது
அகலுள் சேர்ந்தார். |
சொல்லுதற்கரிய
குணச் சிறப்புள்ள வானவர், பயணம் ஆண்டவன்
கட்டளையென்று எடுத்துக் கூறவும், பிரிந்தால் மீண்டும் சேர்த்துக்
கட்டுவதற்கரிய உயிரை உடம்பு பிரிந்தாற் போல், உள்ளத்தில் துயரம்
பெருகலோடு, தாழ்வு கூறுவதற்கரிய இம் மூவர்தம் அடிகளைத் தொழுது,
அம் மூவரசர் பிரிந்து நீங்கி, தாமாக அணுகுவதற்கரிய வேறு வழியை
முன் சென்று காட்டிய விண்மீனின் பின் தொடர்ந்து சென்று, தத்தம்
நாட்டை அடைந்தனர்.
121 |
தேர்ந்தரிதோர்
தெருளுடனச் செல்வரச ரீந்தநிறை
செம்பொன் யாவும்
பேர்த்தரிதோர் பொறையென்னப் பேரருளோர் முப்பாலாய்ப்
பிரிதல் செய்தே
யோர்ந்தரிதோர் முறையிறமக் கொன்றின்றி மெய்ம்மறையை
யோதி னார்க்கு
மார்ந்தரிதொண் மணித்தேவா லயத்திற்கு மிரப்போர்க்கு
ழளவி லீந்தார். |
|