பக்கம் எண் :

முதற் காண்டம்710

தேர்ந்து, அரிது ஓர் தெருளுடன், அச் செல்வ அரசர் ஈந்த
                      நிறை செம்பான் யாவும்
பேர்ந்து அரிது ஓர் பொறை என்ன, பேர் அருளோர், முப்
                      பாலாய்ப் பிரிதல் செய்தே,
ஓர்ந்து அரிது ஓர் முறையில், தமக்கு ஒன்று இன்றி, மெய்ம்
                      மறையை ஓதினார்க்கும்
ஆர்ந்து, அரிது ஒண் மணித் தேவாலயத்திற்கும்,
                      இரப்போர்க்கும் அளவில் ஈர்ந்தார்.

     பேரருள் வாய்ந்த சூசையும் மரியாளும் ஆராய்ந்து, அரியதோர்
தெளிவோடு, செல்வம் மிக்க அவ்வரசர் தந்த நிறைவான செம்பொன்
முழுவதும் தமக்கு மீண்டும் அரியதோர் பாரமே என்று கண்டு, சிந்தித்து
அரிய முறையில் மூன்று பங்காய்ப் பிரித்து, தமக்கென ஒன்றும் வைத்துக்
கொள்ளாமல், மெய்யான வேதத்தை ஓதி உணர்ந்த குருக்களுக்கும் தந்து
நிறைத்து, அரிதான ஒளி பொருந்திய மணிகள் பதித்த தேவாலயத்திற்கும்,
இரப் போருக்குமாக, அந்தந்த அளவுப்படி ஈந்தனர்.

     செல்வ + அரசர் - 'செல்வ வரசர்' என்பது, 'செல்வரசர்' எனத்
தொகுத்தல் விகாரமாயிற்று.
 
                       122
உடையொக்க நீருடுக்கு முலகறிய மன்னவர்வந் தொழிந்த
                              பின்னர்
கொடியொக்க மலருயாத்தோன் குழவியெடுத் தரும்புகழ்செய்
                              குழுவிற் கஞ்சி
மிடியொக்க வெளிமையுற வெயிலார்ந்த கதிர்கரக்கும்
                              விகத்தன் போலக்
கடலொக்கப் பெத்திலை யேங் கடிநகருட் சிறுவீட்டிற்
                              கரந்து புக்கார்.