உடை ஒக்க நீர்
உடுக்கும் உலகு அறிய மன்னவர் வந்து
ஒழிந்த பின்னர்,
கொடி ஒக்க மலர் உயர்த்தோன் குழவி எடுத்து, அரும்
புகழ் செய் குழுவிற்கு அஞ்சி,
மிடி ஒக்க எளிமை உற, வெயில் ஆர்ந்த கதிர் கரக்கும்
விகத்தன் போல,
கடல் ஒக்கப் பெத்திலையேம் கடி நகருட் சிறு வீட்டில்
கரந்து புக்கார். |
ஆடைக்கு நிகராக்
கடலை உடுத்துக் கொண்டிருக்கும் உலகமெல்லாம்
அறியும் வண்ணம் மூவரசர் வந்து நீங்கிய பின்னர், கொடிக்கு நிகராகத் தன்
கோலிற் பூத்த மலரை ஏந்தியுள்ள சூசை குழந்தையை எடுத்துக் கொள்ள,
வெயில் நிறைந்த தன் கதிர்களைத் தானே கடலினுள் மறைத்துக் கொள்ளும்
ஆதவன் போல, அங்கு வந்து அரிய புகழைக் கூறும் கூட்டத்திற்கு அஞ்சி,
கடலுக்கு நிகராக விளங்கிய பெத்திலேம் என்னும் அரண்காவல் கொண்ட
நகரினுள், தம் வறுமைக்கு ஒத்த எளிமை விளங்குமாறு, மரியாளோடு
மூவரும் ஒரு சிறு வீட்டில் மறைந்துபோய்ப் புகுந்தனர்.
ஆதவன் கதிர்களை
மறைத்ததற்குக் 'கடலினுள்' என்ற சொல்லும்,
'புக்கார்' என்ற பன்மைப் பயனிலைக்குப் பொருந்துமாறு 'மரியாளொடு
மூவரும்' என்ற தொடரும் வருவித்து உரைக்கப்பட்டன. 'மூவர்' என அடுத்த
பாடல் சுட்டுவதும் நோக்குக. இடையர் வந்தது ஊரறிந்த செய்தியாகச் சிறு
கூட்டம் சேர்க்க. மூவரசர் வந்தது உலகறிந்த செய்தியாகப் பெருங்கூட்டம்
சேர்க்குமாதலின், புகழுக்கஞ்சி மறையவேண்டியதாயிற்று.
123 |
ஆகைத்தாற்
பல்லியஞ்சூ ழார்த்தெழவிம் முறைமூவ
ரகன்று போகிற்
பானகத்தார் சுடருமிழ்வேற் புற்றொருவா னவனங்கண்
பதிந்தெஞ் ஞான்றுங்
கானகத்தார் விலங்கினமக் கந்தரத்துட் புகல்செய்யா
காவல் செய்து
வானகத்தா ருறையுளென்றா மன்னர்பிரான் பிறந்தமுழை
வயினே மாதோ. |
|