ஆனகத்தால் பல்
இயம் சூழ் எழ, இம் முறை மூவர்
அகன்று போகில்,
பானு அகத்து ஆர் சுடர் உமிழ் வேல் பற்று ஒரு வானவன்
அங்கண் பதிந்து, எஞ்ஞான்றும்
கானகத்து ஆர் விலங்கு இனம் அக் கந்தரத்துள் புகல்
செய்யா காவல் செய்து,
வானகத்தார் உறையுள் என்று ஆம், மன்னர் பிரான் பிறந்த
முழை வயினே மாதோ. |
மேளத்தோடு
பல இசைக் கருவிகள் தம்மைச் சுற்றிலும் எழுந்து
முழங்க, மேலே கூறிய இம்முறைப்படி அம்மூவரும் அகன்று போகையில்,
பகலவனிடம் நிறைந்துள்ள கதிரொளியைப் பொழியும் ஒரு வேலைப் பிடித்த
ஒரு வானவன் அவ்விடத்தில் பதிந்து நின்று, காட்டில் உணவு கொண்டு
தங்க வரும் விலங்கினங்கள் அக்குகையுள் மேற்கொண்டு எந்நாளும் புகா
வண்ணம் காவல் செய்தமையால், அரசர்க்கரசனாகிய ஆண்டவன் பிறந்த
அக்குகையிடம் வானுலகத்தோர் உறைவிடம் போல் அமைவதாம்.
'மாதோ' அசை
நிலை.
காட்சிப்
படலம் முற்றும்.
ஆகப்
படலம் 11க்குப் பாடல்கள் 1125.
|