பக்கம் எண் :

முதற் காண்டம்715

முன் நாள் செய்த அருள் மறவா முறை கொண்டு ஒழுகும்
                      
           தன்மை என,
பின் நாள் பெறும் தம் தலை மகரைப் பிறழாமையின்
                             நேர்ந்து அவர் மீட்பது
அன்ன நாள் சிறையைத் தீர்த்த பிரான் அவர்க்கு ஏவின
                             பாலால்,  எவர்க்கும்
இன்ன நாள் சிறை தீர் தனி மகனை இவரும் நேர்தற்கு
                             ஏகல் உற்றார்.

     முற்காலத்தில் தான் செய்த அக் கருணைச் செயலை மறவாத
முறையாகக் கைக்கொண்டு நடக்கும் தன்மையாக, அதற்குப் பிற்காலத்தில்
அவ் யூதர் பெறும் தம் தலைச்சன் பிள்ளைகளைத் தவறாமல் காணிக்கையாக
நேர்ந்து மீட்டுக்கொள்ள வேண்டுமென்பது, அடிமைச் சிறையை நீக்கிய
அக்கடவுள் அக்காலத்தில் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தமையால்,
இக்காலத்தில் எல்லோருக்கும் பாவச் சிறையைத் தீர்க்கவந்துள்ள தம்
ஒப்பற்ற மகனைக் காணிக்கையாகக் கொடுப்பதற்கென்று இவர்களும்
செல்லலுற்றனர்.

     அன்ன நாள், இன்ன நாள் என நின்று, அந்நாள், இந்நாள் எனப்
பொருள்படும் சொற்கள் தொகுத்தல் தொகுத்தல் விகாரமாய், எதுகை ஒலிச்
சிறப்பும் நோக்கி, அன்னாள், இன்னாள் என நின்றன. ‘அன்னான்’ என்பது,
அவன் எனப் பொருள்படுதலும் ஒப்புநோக்குக. அந்நாள், இந்நாள் எனவே
நிற்பினும் எதுகை சிதைதல் இல்லை. இந்நிகழ்ச்சி பற்றிய செய்தி, லூக்கா
நற்செய்தி, 2 : 22-39 காண்க.
 
                       4
பிறையொண் வடிவந் தேய்த்தொளிசூழ் பிலிற்று மனிச்சப்
                               பதத்தாளும்
மறையொண் வடிவம் போர்த்திலங்கி மலர்க்கோ லோங்கு
                               மாதவனு
நறையொண் வடிவந் துணர்ப்பதத்தை நண்ணி யேற்றி
                               யாசியைக்கேட்
டுறையொண் வடிவங் கொண்முகில்போ லுடல்கொள்
                               ளிறைவ னேந்தினரே.